TamilSaaga

ஏன் ‘பெரியசாமி ராஜேந்திரன்’ உயிரை பறிகொடுத்தோம்? சிங்கப்பூரில் இந்த வருஷம் மட்டும் 27 ஊழியர்கள் உயிர் போச்சு – குடும்பம் என்ன பாவம் செய்தது?

SINGAPORE: அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேறுவது, நோய்த்தொற்றுக்கு மத்தியில் நிர்ணயிக்கப்படும் டெலிவரி காலக்கெடு போன்ற விஷயங்கள் சமீபத்திய பணியிட விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் அதிகரிப்புக்கு காரணிகளாக இருக்கலாம் என்று தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் தற்போது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் பணியிடத்தில் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் பணியிடத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று முன்தினம் உயிரிழந்த தமிழக ஊழியர் பெரியசாமி ராஜேந்திரனின் மரணமும் அடக்கம். கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வரம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, தனது பணியிடத்தில் கிரேனில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலம் (WSH) கவுன்சில் பொது மேலாளர் கிறிஸ்டோபர் கோ கூறுகையில், “எல்லைகளை மீண்டும் திறப்பதன் விளைவாக நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை மேற்பார்வை செய்வதில் அதிக சவால்களை எதிர்கொள்கின்றன” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க – பொண்ணு சிங்கப்பூர்.. மாப்பிள்ளை இங்கிலாந்து.. கல்யாண செலவுக்கு கொள்ளையடித்து பணம் சேகரிக்க முயற்சி – ‘உண்மை’ அறிந்து மனம் இறங்கிய நீதிபதி!

மேலும், எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால், பல நாடுகளில் இருந்து புதிய ஊழியர்கள் வேலைக்கு வருகின்றனர். ஆனால், அவர்கள் புதியவர்களாக இருப்பதால் பணி அனுபவம் அதிகம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அதேசமயம், பெருந்தொற்று காரணமாக சிங்கப்பூரிலேயே முடங்கியிருந்த அனுபவம் வாய்ந்த ஊழியர்கள், நீண்ட காலமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்ததால், இப்போது அதிகளவில் வீட்டுக்கு கிளம்புகின்றனர். இதனால் நிறுவனங்கள் புதியவர்களை வைத்து வேலை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே இது ஒரு மனிதவளக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. இதனால் மேற்பார்வை திறனில் குறைபாடு ஏற்படுகிறது என்றும் மேலாளர் கிறிஸ்டோபர் கோ கூறியுள்ளார்.

எனினும், பாதுகாப்புத் தரநிலைகள் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூர் 2016-ல் இருந்து மிக மோசமான பணியிட மரணங்களை எதிர் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். அவற்றில் 10 பேர் மட்டும் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பெரியளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க – வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு போறது முக்கியமில்ல.. என்ன வாங்கிட்டு போறீங்க-னு தான் முக்கியம்.. ‘Duty Free Shop’ இன்று திறப்பு – வாங்கும் பொருட்களுக்கு ஒரு பைசா வரி கிடையாது!

கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கு உதவுவதில் முதலாளிகளின் பங்கும் கணிசமாக உள்ளது என்று Wee Chwee Huat Scaffolding மற்றும் கட்டுமான உதவி இயக்க மேலாளர் மதியரசன் சுப்ரமணியம் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசிய மதியரசன், மன அழுத்தம் ஊழியர்களை வேலையில் இருந்து திசைதிருப்பலாம் என்றும், சில தொழிலாளர்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேற முடியாததால் தாம்பத்திய பிரச்சனைகளை கூட எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

மனநலப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு, தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க தனது நிறுவனம் தயாராக உள்ளது என்றும், இது “அவர்களுக்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்” என்பதைக் காட்ட உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts