சிங்கப்பூர் மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் சரியாக சொல்லப்போனால் உலகில் உள்ள 98 சதவிகித நாடுகளும் இந்த பெருந்தொற்றின் ஆதிக்கத்தால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பொருளாதார ரீதியாக நமது சிங்கப்பூர் பெரிய அளவில் சவால்களை ஆரம்ப நிலையில் சந்தித்தாலும் தற்போது மக்கள் மற்றும் அரசின் கூட்டுமுயற்சியால் அந்த சவாலகை வென்று வந்துள்ளோம்.
இந்நிலையில் இந்த பதிவில் நமது சிங்கப்பூருக்கு வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வந்து இங்கு தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் தற்போது என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை காணலாம். சிங்கப்பூரில் தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் விடுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல சிங்கப்பூரின் பிற இடங்களில் பரவலாக தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டு ஊழியர்களின் Dormitoryகளில் தளர்வுகள் வழங்கப்படவில்லை.
அண்மையில் சிங்கப்பூர் தேசிய கல்லூரி நடத்திய ஒரு ஆய்வில் “வெளியில் செல்லமுடியாமல், தனிமையில் Dormitoryகளில் தங்கள் நேரத்தை முழுமையக கழிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தது” நினைவுகூரத்தக்கது. சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் விரைவில் வெளிநாட்டு ஊழியர்களின் Dormitoryகளுக்கு விரைவில் தளர்வுகள் அளிக்கப்படும் என்று கூறியுதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சிங்கப்பூரில் தற்போது தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மேற்கொண்டு சிங்கப்பூரில் வேலையில் நீடிக்கலாமா அல்லது தாயகம் திரும்பி குடும்பத்தோடு இணையலாமா? என்ற குழப்ப நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் வந்துள்ளார். சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் வோங் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் தொற்றின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கவோ அல்லது நடிப்பில் தளர்வுகளை மேலும் தளர்த்தவோ திட்டங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் Dormitoryகள் மீண்டும் திறக்கப்படுமா? இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியுமா? என்ற குழப்பத்திலேயே வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் நாட்களை சிங்கப்பூரில் நகர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவிற்கு 210 பேர் உள்ளூரில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 6 வழக்குகள் வெளிநாட்டு ஊழியர்களின் Dormitoryகளில் பதிவாகியுள்ளது. இதனால் வெளிநாட்டு ஊழியர்களின் விடுதிகள் திறக்க மேலும் சில காலங்கள் எடுத்துக்கொள்ளப்படலாம் என்றும் கருதப்படுகிறது.