TamilSaaga

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வருபவர்கள்… 30 கிலோ Luggage அனுமதிக்குள்… என்னென்ன பாத்திரங்களை கொண்டு வரலாம்?

படிக்க, வேலைப்பார்க்க என்று இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படி வருபவர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து போன்றவை சுமூகமாக அமைவதில் பெரிதாக சிக்கல் இருப்பதில்லை.

ஆனால், இந்த சாப்பாடு என்று ஒன்று இருக்கு பாருங்க.. அதில் தான் சிக்கலே. இந்திய உணவுகள் சிங்கப்பூரில் தாராளமாக கிடைக்கும் என்றாலும், எதுவும் வீட்டுச் சாப்பாடு போல் அமையாது. அப்படி ருசியுடன் சாப்பிட வேண்டுமெனில், அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதனால், பலரும் தாங்களாகவே சமைத்து சாப்பிடுவதை விரும்புகின்றனர். அப்படி, சமைத்து சாப்பிடும் கான்செப்டில் உள்ளவர்கள், இந்தியாவில் இருந்து வருகையில், என்னென்ன பாத்திரங்களை கொண்டு வந்தால் உதவிகரமாக இருக்கும் என்பதையும், விமானத்தில் செல்லும் போது, 30 கிலோ தான் அனுமதி என்பதால், அந்த எடைக்குள் என்னென்ன முக்கியமான, அத்தியாவசியமான பாத்திரங்கள் எடுத்துச் செல்லலாம் என்பதையும் இங்கு விரிவாக பார்க்கலாம்.

பிரஷர் குக்கர் – 2

கடாய் – 2 (பேசச்சுலராக இருந்தால் 2 போதும். குடும்பமாக செல்லும் பட்சத்தில் சைஸ் வாரியாக 4 தேவைப்படும்)

பால் பாத்திரம் – 1

இட்லி பானை – 1

மாவு அரைத்து ஊற்ற அகலமான ஒரு பெரிய பாத்திரம் – 1

அதுவே சிறிய பாத்திரமாக – 1

தோசைக் கல், கரண்டியுடன் – 1 (இரும்புக் கல்லே நல்லது)

குழம்பு வைக்க பாத்திரம் – 1

அடுக்கு கிண்ணம் – 1 செட்

கரண்டி – 4 வகைகளில் 1 செட்

சாரணிக் கரண்டி – 1

சப்பாத்தி கல், உருளை – 1

சாப்பாடு தட்டு – 2

டம்ளர்கள் – 2

ஸ்பூன் – சைஸ் வாரியாக 4

30 கிலோ எடைக்குள் இவை அனைத்தையும் கொண்டுச் சென்றுவிட முடியும். மேலே கொடுக்கப்பட்டுள்ள பாத்திர வகைகள் பேச்சுலர்ஸ்களுக்கு ஏற்றார் போல் கொடுத்துள்ளோம். குடும்பமாக செல்வோருக்கும் இது போதுமானதே. இருப்பினும், சில பாத்திரங்கள் அவர்களின் தேவைக்கேற்ப கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts