TamilSaaga

இனி கம்மி விலையில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் பறக்கலாம்… கல்லா கட்ட காத்திருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்… இனி விஸ்தாராவும் இல்லை… டாடாவின் புது மேஜிக்

டாடா குழுமம் தன் நிறுவனத்துடன் ஏர் இந்தியா நிறுவனத்தினை இணைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கடனில் சிக்கி இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தினை டாடா குழுமம் சுமார் ரூ.18000 கோடிக்கு வாங்கியது. அப்போதே தனது விமான சேவை நிறுவனங்களை டாடா ஒன்றாக இணைக்கும் எனப் பேச்சுக்கள் அடிப்பட துவங்கியது.

டாடா குழுமம் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ப்ரீமியம் விமான சேவையை கொடுக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது தான் விஸ்தாரா. தற்போது ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவை இணைக்க டாடா தரப்பு முடிவெடுத்து இருக்கிறது.

இந்த இணைப்பு மார்ச் 2024க்குள் நடக்க வேண்டும் என நிர்வாக தரப்பு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த இணைப்பில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இருக்க வேண்டும் என விரும்பிய டாடா குழுமம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். பல மணிநேரம் நடந்த இந்த இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவில் 25 சதவீத பங்குகளை பெற இருக்கிறதாம். அதை தொடர்ந்து 2000 கோடி ரூபாய் முதலீடு செய்ய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

2013ல் உருவாக்கப்பட்ட விஸ்தாரா குழுமத்தில் டாடாவிற்கு 51 சதவீத பங்குகளும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 சதவீத பங்குகளும் வைத்துள்ளது. தற்போது ஏர் இந்தியா இணைப்பால் அதிக அளவில் விமான சேவைகள் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. 2024ம் ஆண்டிற்குள் டாடா குழுமத்தில் இருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனங்களும் இணைக்கப்பட இருக்கிறது.

இந்த மாபெரும் இணைப்பு நடந்தால் உலகளவில் 2வது மிகப்பெரிய விமான சேவை அளிக்கும் நிறுவனமாக டாடா குழுமம் உருவெடுக்கும்.
தொடர்ந்து கம்மி விலையில் விமான டிக்கெட்டையும் ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் டாடா வழங்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. விஸ்தாராவின் 53 விமானங்கள், ஏர் இந்தியாவின் 113 விமானங்கள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 24 விமானங்கள், ஏர் ஏசியா இந்தியாவின் 28 விமானங்கள் இணைந்து 218 விமானங்கள் கொண்டு நிறுவனமாக டாடா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts