சிங்கப்பூரில் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளி நாடுகளுக்கான பயண போக்குவரத்து இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை.
அண்டை நாடான இந்தியாவில் இருந்து பலதரப்பட்ட மக்கள் சிங்கப்பூரில் வேலை மற்றும் தொழில் சார்ந்து வசித்து வருகிறார்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு அவசர தேவைக்கு கூட செல்ல இயலாத சூழலில் இருக்கிறார்கள்.
இருப்பினும் வந்தே பாரத் விமான சேவை மூலம் கடந்த ஓர் ஆண்டாக விமான பயணங்களை Air India Express வழங்கி வருகிறது. இந்த ஒரு விமான சேவை மட்டுமே சிங்கப்பூரில் இருந்து அண்டை நாடான இந்தியாவுக்கு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜீலை மாதத்திலும் வந்தே பாரத் தனது முன்பதிவை நடத்தி சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு பயண சேவையை வழங்கியது. தற்போது அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்கான சேவையை எதிர்நோக்கி பலரும் இந்தியா செல்வதற்காக காத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் தான் வந்தே பாரத் ஆகஸ்ட் மாத பயண சேவைக்கான முன்பதிவை துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்பதிவு மட்டுமே தற்போது துவங்கப்பட்டுள்ளது. விமான சேவை வழங்கப்படும் பயணத்துக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு செல்ல காத்திருக்கும் மக்களுக்காக விரைவில் பயண தேதி அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.