சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இறுதி சடங்குக்கான பார்லர் விடுத்திருக்கும் ஒரு செய்தி பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
Casket Fairprice என்ற பெயரில் சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது இறுதி சடங்குக்கான பார்லர். இறந்தவர்களுக்கு மேக்கப் செய்து சவப்பெட்டியில் அழகாக வைப்பதே இவர்களின் வேலையாக இருக்கும். தற்போது Casket Fairprice ஒரு கேம்பைனை தொடங்கி இருக்கின்றனர். அதில் உங்களிடம் இருக்கும் தேவையற்ற மேக்கப் பொருட்களை தூக்கி போடாதீர்கள். அதை எங்களிடம் கொடுங்கள். பிணங்களுக்கு எம்பால்மிங் செய்ய பயன்படுத்தி கொள்கிறோம். உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Dignity for the Departed எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த பிரசாரம் கடந்த டிச.16ந் தேதி தொடங்கப்பட்டது. வரும் ஜன.17 வரை நடக்கும் இதில் Concealers,
High coverage foundation, Eyebrow pencils, Blusher, Lipsticks, Setting powders மற்றும் sprays தானம் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
Casket Fairprice, 37 Sin Ming Drive #01-571, Singapore 575711 என்ற முகவரியில் உங்கள் பொருட்களை கொரியர் மூலம் அனுப்பலாம். அல்லது ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 8.30 முதல் மாலை 4.30 மணிக்குள் நேரிலும் கொண்டு வந்து தரலாம். சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மதியம் 1 வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
casket fairprice இறுதி சடங்குகளுக்காக இருக்கும் மேக்கப் பொருட்களை வாங்கி செய்து வருகின்றனர். தற்போது மேக்கப் பொருட்களின் கழிவுகளை குறைக்கவே இந்த பிரசாரம் நடத்தப்படுகிறது. இறந்தவர்களின் உடலின் நிலையை வைத்து எம்பால்மிங்கிற்கு குறைந்தது 1 அல்லது 2 மணி நேரம் எடுக்கும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.