சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கான நடவடிக்கைகளை நெறிப்படுத்திய பல அமைச்சக பணிக்குழு (MTF) இன்று (பிப். 16) சில நெறிமுறைகளை அறிவித்தது. எதிர்காலத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் SHN-இல்லாத பயணத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மேற்கோள்காட்டி இது நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Country/Region வகைகளுக்கான மாற்றங்கள்
தற்போதுள்ள Categories 2, 3 மற்றும் 4 ஆகியவை ஒரே General Travel categoryயாக இணைக்கப்படும்.
கோவிட்-19 வளர்ச்சியடைந்து வரும் சூழ்நிலைகளைக் கொண்ட நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்காக ஒரு புதிய தடைசெய்யப்பட்ட category (Restricted category) உருவாக்கப்படும்.
Category 1 பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் (தடுப்பூசி போடாத மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்கள்) மற்றும் தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை (VTL) ஏற்பாடுகள் வழியாக வரும் முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகளும் தனிமைப்படுத்தப்படாத எல்லை நடவடிக்கைகளை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும்.
எல்லை நடவடிக்கைகளில் மாற்றங்கள்
பிப்ரவரி 21, 2022, 11:59pm முதல் வரும் பயணிகளுக்கு எல்லை நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்படும்:
Travel history தேவை 14லிருந்து ஏழு நாட்களாக குறைக்கப்படும். SHN கால அளவு அனைத்து நாடு அல்லது பிராந்திய வகைகளிலும் ஏழு நாட்களுக்குத் தரப்படுத்தப்படும்.
VTLகளில் வரும் பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட சோதனை முறை நிறுத்தப்படும்.
VTL மற்றும் category 1 பயணிகள் இனி வரும்போது PCR (Polymerase Chain Reaction) சோதனையைச் செய்ய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, சிங்கப்பூர் முழுவதும் அமைந்துள்ள சோதனை மையங்களில் ஒன்றில் மேற்பார்வையிடப்பட்ட self-swab (SSS) ART எடுக்க அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்ததிலிருந்து 24 மணிநேரத்திற்குள் எடுக்கலாம்.
தடுப்பூசி போடப்பட்ட Long-Term Pass வைத்திருப்பவர்கள் (வேலை அனுமதி பெற்றவர்கள் தவிர) இனி சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு தடுப்பூசி போடப்பட்ட பயண பாஸ் (VTP) அல்லது நுழைவு அனுமதியைப் பெற வேண்டியதில்லை. இருப்பினும், அவர்கள் நுழையும்போது எல்லை சுகாதார நடவடிக்கைகளை இன்னும் கடைபிடிக்க வேண்டும்.
“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”