TamilSaaga

“சிங்கப்பூரில் செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் பாதி” : பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் முதல் பாதியைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் அதிக இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றும். பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 24 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான ஒட்டுமொத்த மழையானது தீவின் பெரும்பாலான பகுதிகளில், சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மழை இல்லாத ஒரு சில “சூடான” இம்மாதத்தில் இருக்கலாம் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தினசரி அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சிங்கப்பூர் வானிலை சேவை (MSS) நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 16) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் சிங்கப்பூரில், குறைந்த அளவு காற்று பெரும்பாலும் தென்கிழக்கு அல்லது தென்மேற்கில் இருந்து வீசும், எப்போதாவது தெற்கிலிருந்து வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காலையின் பிற்பகுதியிலும், பிற்பகலிலும் தீவின் சில பகுதிகளில் குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இரவு நேரங்களில் வானிலை சூடாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை சுமார் 28 டிகிரி செல்சியஸ், குறிப்பாக தீவின் தென்கிழக்கில் பதிவாகும் என்று கூறப்படுகிறது. தென்கிழக்கு காற்று கடலில் இருந்து சூடான மற்றும் ஈரப்பதமான காற்றை நிலத்தின் மீது கொண்டு வரும்போது இது நிகழ்கிறது.

செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில், இதேபோன்ற தென்மேற்கு பருவமழை நிலைமைகள் இப்பகுதியில் காணப்பட்டன.

Related posts