சிங்கப்பூர், பல நாட்டு ஊழியர்களின் ஒரு சொர்க்கபுரி என்று தான் கூறவேண்டும். சிங்கையின் வளர்ச்சிக்காக உழைக்கும் சிங்கப்பூரர்களுக்கு மட்டுமல்லாமல் இங்கு பாடுபடும் எல்லா நாட்டவர்களையும் சமமாக பார்க்கின்ற ஒரு குட்டி தீவுதான் நமது சிங்கப்பூர்.
இன்றைய தேதியில் சிங்கப்பூரில் பல லட்சம் இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர், குறிப்பாக தமிழர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சியில் அன்றைய காலம் முதலே பெரு பங்கினை அளித்து வருகின்றனர் என்றால் அது எந்த அளவிலும் மிகையல்ல.
இந்நிலையில் கடந்த ஜூலை 27.07.2022 அன்று தமிழர்கள் அனைவரும் பெருமைகொள்ளும் அளவிற்கு ஒரு மாபெரும் விருதினை பெற்றுள்ளார் சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழரான மோகன். இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் Safety Manager பொறுப்பில் உள்ளார்.
தற்போது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வழங்கும் Safety and Health Award Recognition for Projects (SHARP) என்ற இந்த 2022ம் ஆண்டுக்கான விருதை பெற்றுள்ளார் மோகன். இந்த விருது பெரிய அளவிலான திட்டங்கள் அல்லது நல்ல பாதுகாப்பு, சுகாதார செயல்திறன், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மேலாண்மை அமைப்புகளைக் கொண்ட பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது.
மோகன் சென்னையை பூர்வீகமாக கொண்டவர் இவரது மனைவியின் பெயர் அர்ச்சனா, இந்த தம்பதிக்கு ஒரு மகளும், இளைய மகனும் உள்ளனர். சிங்கப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான SHARP விருதை மோகன் பெற்றுள்ளது தமிழர்கள் அனைவரையும் பெருமையடைய செய்துள்ளது.
தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் தமிழகத்தில் இருக்க பெருந்தொற்று காலத்தில் தாயகம் கூட செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார் மோகன். ஆனால் குடும்பத்தை பிரிந்து வாழும் அந்த கடிமான நேரத்திலும் கூட தனது முழு கவனத்தையும் தனது பணியில் செலுத்தி இன்று ஒரு சிறந்த ஊழியராக திகழ்ந்து வருகின்றார் அவர். உண்மையில் மோகன் போன்ற உண்மையான உழைப்பாளர்கள் சிங்கப்பூரின் வரம் என்றே கூறலாம்.