சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 11 பாலியல் முறைகேடு புகார்களில் ஒரு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இரண்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது பல்கலைக்கழகம்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்காக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (NUS) ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் இரண்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று பல்கலைக்கழகம் நேற்று (ஆகஸ்ட் 5) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் குறித்த இரண்டாவது அறிக்கையில், NUS இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 11 புகார்களைப் பெற்றதாகக் கூறியுள்ளது. பாலியல் முறைகேடு புகார்களில் பத்து மாணவர்களுக்கு எதிராகவும், மற்றொன்று ஊழியர் சம்பந்தப்பட்டதாகவும்வந்துள்ளதாக NUS தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஐந்து பாலியல் முறைகேடு புகார்கள் மற்றும் ஊழியர்கள் மீது நான்கு புகார்கள் வந்தன. பள்ளியில் ஆராய்ச்சி ஊழியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக இரண்டு மாணவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் NUS தெரிவித்துள்ளது. ஊழியர் பணியிடத்தில் தகாத பாலியல் கருத்துக்களை தெரிவித்ததாகவும், மாணவர்களுக்கு தகாத வீடியோக்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஊழியர் ஒருவர் சம்மதம் இல்லாமல் தகாத உடல் தீண்டல் செய்ததாகவும் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார் .
பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு வாரியத்தால் இரண்டு மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் வழக்கில், புகார்தாரர் பிப்ரவரி 10 அன்று மாணவர் விடுதியில் இருந்தபோது புகார் அளித்தவருடன் “உடன்படாத பாலியல் உடலுறவு” கொண்டதாக புகார் கூறியுள்ளார்.
இரண்டாவது வழக்கில், மற்றொரு புகார்தாரர் மார்ச் 26 அன்று, ஒரு மாணவர் புகார்தாரரை விடுதியில் இருந்தபோது சம்மதம் இல்லாமல் முறைகேடாகத் தொட்டார். மற்றொரு புகார்தாரரை அவர்களின் அனுமதியின்றி நிர்வாணமாக விடுதியில் படம்பிடித்ததாகவும் அந்த மாணவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
“ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நாங்கள் கவனிக்கிறோம் … மாணவர் குற்றவாளிகள் என்று கூறப்படும் நபர்களுக்கு எதிராக புகார்கள் தாக்கல் செய்ய அதிகமான நபர்கள் முன்வருவதை நாங்கள் காண்கிறோம்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
“அதிக வெளிப்படைத்தன்மை கொண்ட எங்கள் அணுகுமுறை NUS மீதான நம்பிக்கையின் அளவை அதிகரித்துள்ளது என்பதை இது நிரூபிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம், ஒவ்வொரு புகாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, உரிய செயல்முறையைத் தொடர்ந்து முழுமையாக ஆராயப்படுகிறது, மேலும் நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு மீறலுக்கும் பொருத்தமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.” என்று பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளது.