சிங்கப்பூரில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு திடலில் நாகப்பாம்பு குட்டி ஒன்று கூர்ந்து செல்லும் காட்சி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் பொதுவாகவே அடுக்குமாடு குடியிருப்புகள் அதிகம் என்பதால் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புக்கு நடுவிலும் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.
அந்த விளையாட்டு திடல்களை சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் மேடை ஆனது குழந்தைகள் கீழே விழுந்தாலும் அடிபடாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது சிங்கப்பூரின் சிறப்பாகும். இந்நிலையில் செம்பவாங்கில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நாகப்பாம்பு குட்டி ஒன்று நகர்ந்து செல்லும் வீடியோவானது பேஸ்புக்கில் வெளியிடப்பட்டதை ஒட்டி அனைவரும் தங்களது கருத்துக்களை அந்த வீடியோவின் கீழே பதிவிட்டு வருகின்றனர்.
பெரும்பாலானோர் இது மிகவும் ஆபத்தானது எனவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அப்படி இருப்பின் அருகில் உள்ளோர் கவனமாக இருக்கும்படியும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர். மேலும் நாக பாம்பு குட்டி அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில் எப்படி வந்தது? மேலும் நாக பாம்பு குட்டி தென்பட்டால் இன்னும் பல நாகப் பாம்புகள் அருகில் இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடும் மைதானம் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.