TamilSaaga

“இது கொஞ்சம் புதுசு” – சிங்கப்பூரில் Vaccination சான்றிதழை வித்யாசமாக பயன்படுத்திய இளைஞர்

சிங்கப்பூரில் தடுப்பூசி திட்டம் மிக வேகமாக செயல்பட்டு வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 81% மக்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டு உள்ளனர். மேலும் சுமார் 72% மக்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் பெற்றுள்ளனர்.

இந்த விவரங்களில் முதியவர்கள் எவ்வளவு பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளார்கள் என்ற தகவலும் வெளியிட்டுள்ளது.

60-69 வயதுடையவர்கள் :

சிங்கப்பூரில் சுமார் 60 முதல் 69 வயதுடைய முதியவர்களில் 87 சதவீதம் பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர். சுமார் 91 சதவீத முதியவர்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர். மொத்தத்தில் 9 சதவீதத்தினர் மட்டுமே இன்னும் தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க தற்போது நாட்டில் தடுப்பூசி முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே உணவகங்களில் உணவு உண்ண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மேல் சட்டையையே தடுப்பூசி சான்றாக மாற்றியுள்ளார் சிங்கப்பூர் இளைஞர் ஒருவர். தனக்கு தடுப்பூசி போடப்பட்ட அந்த சான்றிதழை தனது டி-ஷர்ட்டில் பிரிண்ட் செய்து அதை போட்டுகொண்டு அவர் உணவகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இதுபோன்ற விஷயங்கள் உதவுவதாக கூறப்படுகிறது. அந்த வாலிபரும் தனது இன்ஸ்டா பதிவில் தடுப்பூசி போட வலியுறுத்தியுள்ளார்.

Related posts