சிங்கப்பூரில் சமீபத்திய காலத்தில் பல கடைகள் மூடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், உங்களின் ஸ்பெஷல் ஸ்பாட்டும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
133 Ang Mo Kio Ave 3ல் அமைந்துள்ள Mei Xiang Popiahஐ வைத்திருக்கும் வயதான தம்பதியினர், இந்த வார இறுதிக்குப் பிறகு தங்கள் 39 வயதான பிஸினஸில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளனர். 80 வயதான Hu Chaocheng மற்றும் அவரது மனைவி 78 வயதாகும் Fu Laizhi இணைந்து 1984ம் ஆண்டு முதல் ஹூ கடையை ஒன்றினை நடத்தி வருகின்றனர்.
கூகுளில், பல வாடிக்கையாளர்கள் ஸ்டாலுக்கு ஐந்து நட்சத்திர ரிவியூ அளித்துள்ளனர். பலர் popiah skinன் மொறுமொறுப்பான மற்றும் ப்ரஷனான மசாலாக்களை பாராட்டுகின்றனர். அந்த ரிவியூவில் ஒருவர் இந்த கடையை சிங்கப்பூரின் Hidden gem என பாராட்டு இருக்கின்றார். ஃபூ இந்த பிஸினஸ் தனது தந்தையிடமிருந்து வந்ததாக தெரிவித்தார்.
78 வயதான அவரது மனைவி கூறுகையில், ”நாங்கள் எங்களுக்காக ஒரு வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும் மற்றும் எங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதால் நாங்கள் எங்கள் ஹாக்கர் தொழிலைத் தொடங்கினோம். ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிகள் தங்கள் பேரனைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும் வரை, தம்பதியினர் ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வந்தனர். அன்றிலிருந்து வார இறுதி நாட்களில் மட்டுமே கடை திறக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: இழந்த இளமைக்காலம்… 17 வருடமாக தமிழகம் செல்லாமல் உழைத்த மாரிமுத்து… சிங்கை பாஸ் கலந்து கொண்ட வைரல் திருமணம்… ஏன் அத்தனை ஸ்பெஷல் தெரியுமா?
அவரும் அவரது கணவரும் வயது முதிர்ந்ததால் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகவும் ஃபூ பகிர்ந்துள்ளார். கூடுதலாக, ஸ்டால் அமைந்துள்ள கோபிட்டியமும் விரைவில் புதுப்பிக்கப்படும், அதன் பிறகு வாடகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 25 மற்றும் 26) ஸ்டால் செயல்படுவதற்கான கடைசி நாட்கள் ஆகும்.
வயதான தம்பதியினர், சமீபத்திய வாரங்களில் ஓய்வு பெறுவதாக அறிவித்த முதல் பிஸினஸ்மேன்கள் மட்டும் அல்ல. பிப்ரவரியில், ABC Brickworks Market and Food Centerல் அமைந்துள்ள Tiong Bahru Yi Sheng Fried Hokkien Mee ஸ்டாலின் இரண்டாம் தலைமுறை உரிமையாளரான Toh Seng Wangன் நண்பர் ஓய்வு பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஸ்டால் அரசாங்கத்திடம் திரும்பப் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சைனாடவுன் வளாகத்தில் உள்ள பிரபல ஸ்டாலான ஜாவோ ஜி க்ளேபாட் ரைஸின் உரிமையாளர், மனிதவளப் பிரச்சினைகளால் தனது 43 வருட வியாபாரத்தை நிரந்தரமாக மூடப் போவதாக அறிவித்தார்.