சிங்கப்பூரின் உமர் புலவர் தமிழ் மொழி மையம் இப்பொது உள்ள இடத்தின் குத்தகை காலம் காலாவதியான பிறகு, 2027ம் ஆண்டில் இருந்து ஜாலான் பெசாருக்கு மாற்றப்படும். தற்போது பீட்டி சாலையில் அமைந்துள்ள இந்த மையம், ஜனவரி 2027 முதல் 1 விக்டோரியா லேனில் உள்ள ஸ்டாம்ஃபோர்டு தொடக்கப்பள்ளியின் முந்தைய இடத்திற்கு மாற்றப்படும் என்று கல்வி அமைச்சகம் (MOE) இன்று ஆகஸ்ட் 23 அன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியது.
தமிழ் வளர்க்கும் சிங்கப்பூர்
இந்த மையம், G1, G2 மற்றும் G3 நிலைகளில் தமிழ், உயர் தமிழ் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கியம் ஆகியவற்றை வழங்கும் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் ஒரு மொழி மையமாகும். இது தேசிய தமிழ் மொழி வள மையமாகவும் செயல்படுகிறது, தேசிய அளவில் மொழி கற்பித்தல் மற்றும் கற்றலை மேம்படுத்துவதற்காக பல சமூகத்துடன் இணைந்து செயல்படுகிறது இந்த மொழி மையம்.
கடந்த 2009 மற்றும் 2011க்கு இடையில் ஒரு தற்காலிக இடமாற்றத்தைத் தவிர, இது 1982 முதல் செயிண்ட் ஜார்ஜ் சாலை தமிழ் மொழி மையம் என்று அழைக்கப்பட்டதிலிருந்து இதே பீட்டி சாலையில் அதன் தற்போது வரை செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்த “புதிய தளத்தில் உள்ள இந்த வளாகம் மாணவர்களுக்கு பெரிய கற்றல் மேன்பாட்டையும், கூடுதல் வசதிகளையும் வழங்கும். இதில் கபடி போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய தங்குமிட மைதானம் மற்றும் பெரிய வகுப்பறைகளும் உள்ளது” என்று MOE தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டில் ஸ்டாம்ஃபோர்டு தொடக்கப்பள்ளி, ஃபாரர் பார்க் தொடக்கப்பள்ளியுடன் இணைக்கப்பட்டபோது காலியாக இருந்த இந்த புதிய இடத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த பொதுப் போக்குவரத்து இணைப்பைப் பெறுவார்கள் என்றும் அது மேலும் கூறியது. இந்த இடம் புகிஸ் மற்றும் ஜாலான் பெசார் MRT நிலையங்களிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது மற்றும் பேருந்து வழித்தடங்களால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ‘லாக் ஸ்டோரேஜ்’ என்றால் என்ன? வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது எவ்வாறு ஒரு வரப்பிரசாதம்?
இந்திய மற்றும் தமிழ் சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட ஒரு குழுவை வழிநடத்தும் இரண்டு அரசியல் அதிகாரிகளில் ஒருவரான திரு. தினேஷ் பேசுகையில் “பல தலைமுறைகளாக, பீட்டியில் உள்ள UPTLC வெறும் முகவரி என்பதை தாண்டி பல நன்மைகளை கொடுத்தது – இது ஒரு கலாச்சார சின்னமாகவும், நமது சமூகத்தின் இதயத்துடிப்பாகவும் இருந்து வருகிறது” என்றார் அவர்.