சிங்கப்பூரின் TOTO லாட்டரியில் நீங்கள் நினைக்காத அளவில் ஒரு ட்விஸ்ட் நடந்து இருக்கிறது. அந்த சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக.
வாரம் இருமுறை குலுக்கப்படும் சிங்கப்பூர் TOTO லாட்டரியின் இந்த வார குலுக்கல் (டிச.12) நேற்று மாலை நடைபெற்றது. பொதுவாக Group 2 பரிசை இரண்டு அல்லது மூன்று நபர்கள் தட்டி செல்வார்கள். ஆனால் இந்தமுறை ஒருவருக்கே பரிசு கிடைத்து இருக்கிறது. இரண்டாவது பரிசான $614,409 சிங்கப்பூர் டாலர் இந்திய மதிப்பில் 4 கோடியாக மதிப்பிடப்படுகிறது. மூன்றாவது பரிசாக Group 3 விழுந்திருக்கும் $1,727ஐ 145 பேர் பெறுகிறார்கள்.
இதையும் படிங்க: டெஸ்ட் அடிக்க லட்சக்கணக்கில் பணத்தை அழிச்சது போதும்.. சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வெறும் 80,000 ரூபாய் மட்டுமே.. நான்கே நாட்களில் Certificate!
Group 4ல் $314 சிங்கப்பூர் டாலரை 435 பேருக்கும், Group 5ல் $50 சிங்கப்பூர் டாலரை 7,799 பேரும், Group 6ல் $25 சிங்கப்பூர் டாலரை 11,685 பேரும் பெறுகிறார்கள். Group 7ல் $10 சிங்கப்பூர் டாலர் 147,471 பேருக்கு கிடைத்துள்ளது. கடந்த வாரத்தில் முதல் மற்றும் இரண்டாம் பரிசை யாருமே வெல்லவில்லை என்பதால் இந்த வாரத்தின் Group 1 பரிசு $2,918,439 சிங்கப்பூர் டாலராக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்திய மதிப்பில் 17 கோடி ரூபாயாக இருக்கும் இந்த பரிசு யாருக்குமே கிடைக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது வாரமாக யாருக்கும் இந்த அதிர்ஷ்ட காற்று அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிங்கப்பூர் TOTO லாட்டரியின் இந்த வார இரண்டாவது குலுக்கல் டிசம்பர் 15ல் நடைபெறுகிறது. அதில் முதல் பரிசை பெறும் வெற்றியாளருக்கு பரிசுத்தொகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.