சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கல் கடந்த நவ.3ம் தேதி நடைபெற்றது.
இதில், Group 1 எனப்படும் முதல் பரிசாக $ 5,578,700 சிங்கப்பூர் டாலர் அறிவிக்கப்பட்டது. அதாவது, இந்திய மதிப்பில் 32 கோடிக்கும் மேல்.
கடந்த லாட்டரியில் முதல் பரிசு யாருக்கும் கிடைக்காத நிலையில், இந்த முறை ஜாக்பாட் பரிசை ஒருவர் வென்றுள்ளார். பொதுவாக முதல் பரிசை இரண்டு பேர் வெல்வார்கள். ஆனால், இம்முறை ஒருவருக்கு மட்டுமே அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. இதன் மூலம், இந்திய மதிப்பில் 32 கோடியே 60 லட்சத்துக்கும் மேல் உள்ள தொகையை அவர் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்.
Winning Numbers
13 | 21 | 24 | 25 | 26 | 41 |
அதேபோல், Group 2 எனப்படும் 2வது பரிசான $143,683 சிங்கப்பூர் டாலர் தொகையை 4 பேர் வென்றுள்ளனர். இந்திய மதிப்பில் 83 லட்சம் தொகை கொண்ட பரிசு இது.
குலுக்கலில் பரிசு வென்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். இதையடுத்து, அடுத்த வாரத்தின் முதல் குலுக்கல் வரும் நாளை (நவ.7) நடைபெறுகிறது. இதில், முதல் பரிசாக, $1,000,000 சிங்கப்பூர் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.