TamilSaaga

பிரதமர் லீ பெயரில் “போலி ஆன்லைன் கட்டுரைகள்”.. மக்களே உஷார் – எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் போலீஸ்

சிங்கப்பூரில் Bitcoin மற்றும் Ethereum போன்ற கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வதை பிரதமர் லீ சியன் லூங் ஆதரிப்பதாகக் கூறப்படும் போலி ஆன்லைன் கட்டுரைகளுக்கு எதிராக இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 30) ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது சிங்கை ​​காவல்துறை.

இந்த போலி ஆன்லைன் கட்டுரைகள் முதலீடுகளை “பாதுகாப்பானதாகவும், அதிக லாபம் ஈட்டக்கூடியதாகவும்” சித்தரிக்கின்றன என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஒன்லைன் கட்டுரைகளில் உள்ள லிங்க்களை கிளிக் செய்யும்போது அது முதலீடுகள் குறித்த தலங்களுக்கு செல்கின்றது.

அதில் நீங்கள் உங்கள் சொந்த தரவுகளை அளிக்கும்போது அதனை பெற்று இதுபோன்ற போலி விளம்பரங்களை வெளியடியும் முதலீடுகள் தொடர்பான சில நிறுவங்கள் உங்களை அழைத்து இன்வெஸ்ட்மென்ட் குறித்து பேசுவார்கள்.

“பொய்யான அல்லது தவறான விளம்பரங்களைப் பயன்படுத்தும் இதுபோன்ற நிறுவனங்களைக் கையாள வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது,” என்று போலீசார் வெளியிட்ட தகவலில் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் கடற்கரை சாலை சந்திப்பு.. கண்மூடித்தனமாக சட்டென்று திரும்பிய கார்.. முடித்தூக்கிய SMRT பேருந்து, “ஏன் இவ்வளவு அவசரம்” – வெளியான வீடியோ

முதலீட்டு வாய்ப்பை முழுமையாகப் புரிந்துகொள்வதற்குத் தேவையான பல கேள்விகளை மக்கள் கேட்க வேண்டும். மேலும் அவர்களின் கேள்விகளுக்கு நிறுவனத்தால் பதிலளிக்க முடியவில்லை என்றால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் குறிப்பிட்ட அந்த நிறுவனம், அதன் உரிமையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களைச் சரிபார்த்து, அவர்கள் சொல்வது உண்மையானதா என்பதை மதிப்பிட வேண்டும். மேலும் நிதி நிறுவனங்களின் டைரக்டரி உட்பட கிடைக்கக்கூடிய ஆதாரங்களைப் பயன்படுத்தி நிறுவனத்தின் மற்றும் பிரதிநிதியின் நற்சான்றிதழ்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts