சிங்கப்பூரில் Pioneer என்ற வேலை செய்யும் இடத்தில் 20 அடி நீளமுள்ள கொள்கலனால் நசுக்கப்பட்ட 49 வயதான சிங்கப்பூர் தொழிலாளி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை பரிதாபகரமாக இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறுகையில், கப்பல் கொள்கலன்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு வாகனமான “Side Loader” கன்டெய்னர் இறக்கப்படும்போது இந்த அபாயகரமான பணியிட சம்பவம் நிகழ்ந்தது என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு 42 வயதான நபர் ஒருவர் தனது மோசமான செயலால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 15 Pioneer Crescent நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) சம்பவத்தன்று காலை 9 மணியளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. SCDF அங்கு வந்தபோது காயமடைந்த தொழிலாளி அந்த இடத்தில் அசைவில்லாமல் காணப்பட்டார் மற்றும் SCDF துணை மருத்துவரால் சோதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த இறந்த தொழிலாளி வேலை செய்யும் இடம், ஒரு கொள்கலன் கிடங்கு மற்றும் இறந்த தொழிலாளியின் முதலாளிகள் Allied Container (பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள்) என்று MOM வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கன்டெய்னர்களை ஏற்றுவதையும் இறக்குவதையும் நிறுத்தவும், Side Loderகளை பயன்படுத்துவதை நிறுத்தவும் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் நிகழ்ந்த 30 வது பணியிட இறப்பு மற்றும் சமீபத்திய மாதங்களில் ஏற்பட்ட அபாயகரமான பணியிட விபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை துவாஸ் எரியூட்டும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு இரண்டு தொழிலாளர்களைக் கொன்றது மற்றும் மூன்றில் ஒருவரை கடுமையாக காயப்படுத்தியது.கடந்த 2020ம் ஆண்டில் 30 பணியிட இறப்புகள் பதிவாகின. இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் மேலும் கடந்த 2019ல் 39 மற்றும் 2018ல் 41 பணியிட இறப்புகள் பதிவாகியுள்ளன.
“இது நாம் யாரும் அடைய விரும்பாத ஒரு மோசமான மைல்கல்” என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) உதவி பொதுச் செயலாளர் மெல்வின் யோங் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறினார். மேலும் அவர் வெளியிட்ட ஒரு முகநூல் பதிவில் “மற்றொரு பணியிட மரணத்தை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று கூறினார்.