TamilSaaga

ஷங்கர் பட பிரம்மாண்டத்தை மிஞ்சிய சிங்கப்பூர் வாலிபரின் “Love Proposal” – இப்படியொரு காதலை எதிர்பார்க்காத காதலி – வியந்து நின்ற Marina Bay பகுதி மக்கள்

காதலுக்காக இவ்வளவு தூரம் கூட போவார்களா என்று வியக்க வைத்துள்ளார் சிங்கப்பூர் வாலிபர் ஒருவர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர், பெண் ஒருவரை மிகத் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார். அவரை இம்ப்ரெஸ் செய்து காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இவர் கையாண்ட ஐடியா, சிங்கப்பூர் இளம் பெண்களை ‘பார்றா’ என்று ஏக்கமா மூச்சு விட வைத்துள்ளது.

இதற்காக சிங்கப்பூரின் Marina Bay பகுதியில், ஒரு பிரம்மாண்ட drone light show-வை அந்த இளைஞர் ஏற்பாடு செய்திருக்கிறார். 150 ட்ரோன்களை உள்ளடக்கிய இந்த ஒளிக் காட்சி, மெரினா பகுதியைச் சுற்றியுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்தது.

Marina Bay-ன் மையத்தில் உள்ள புல்வெளித் தரையில் இந்த drone light showவுக்காக விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் மாதம் 2.5 லட்சம் சம்பளம்.. வருடத்திற்கு 29 லட்சம்.. குடும்பத்துக்கு மாதம் 1 லட்சம் வரை சேமித்து அனுப்பலாம் – சிங்கப்பூர் MDIS அறிவிப்பு

பகலில் விளக்கு அமைக்கும் வேலைகள் முடிந்ததும், இரவில் தனது காதலியை அழைத்து வந்த அந்த நபர், தனது மாயாஜால வித்தைகளை அவிழ்த்துவிட்டார்.

இரவையே வெளிச்சமாகும் அளவுக்கு விளக்குகள் விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்க, அந்த நபர் முழங்காலிட்டு தனது காதலியின் விரல்களில் மோதிரம் அணிவித்து, தன் காதலை வெளிப்படுத்தினார்.

இதற்கு அந்த பெண் ‘yes’ என்று காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிறகு, “Bry❤️Van” and “I LOVE U”.என்று விளக்குகள் ஒளிர, அந்த பெண் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts