சிங்கப்பூர் வேலைக்கு செல்ல முடிவெடுக்கும் போது பலரும் முதலில் நாடுவது என்னவோ ஏஜென்ட்டினை தான் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட லட்சம் பணத்தினை கொடுத்து வேலை வாங்கி தர சொல்லுவார்கள். ஆனால் அப்படி நடக்கும் செயல்முறையில் கூட சிலர் ஏமாற்றி ஒன்னுமே இல்லாமல் செய்து விடுவார்கள்.
அதற்கு வரபிரசாதமாக இருப்பது தான் job சைட்ஸ். சிங்கப்பூரில் இருக்கும் வேலை வாய்ப்பு இணையத்தளங்களில் வேலை தேடி வெளிநாட்டு இளைஞர்களால் செட்டில் ஆகி விட முடியும். ஆனால் அதற்கும் சில வழிகளை நீங்க ஃபாலோ செய்து தான் ஆக வேண்டும். முதலில் Resume கொடுக்கும் போது நீங்கள் அப்ளே செய்து இருக்கும் வேலைக்கான keywordகளை வைத்திருக்காத சிலவற்றினை Application tracking system ரிஜெக்ட் செய்து விடும்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு வரணுமா கண்டிப்பா இந்த course பண்ணணும்… Fail ஆனா நாடு திரும்ப வேண்டியது தான்
கம்பெனியின் ஹெச்.ஆருக்கு கூட செல்லாமல் உங்களின் ரெசியூம் பாதியிலேயே நின்றுவிடும். அதில் இருந்து தப்பித்து ஹெச்.ஆர் கைக்கு உங்க ரெசியூமினை எடுத்து செல்வது எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்ளுங்கள். Resumeஐ ரெடி செய்ய இலவச சைட்கள் நிறைய இருக்கிறது. அதில் Novo Resume, overleaf ஆகியவை பிரபலமானவை. இதன் மூலம் உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்பவும், நீங்க அப்ளே செய்ய இருக்கும் positionக்கு ஏற்பவும் Resume ரெடி செய்ய முடியும்.
Resumeன் டாப்பில் உங்களின் பெயர், இமெயில் ஐடி மற்றும் தொலைப்பேசி எண் தெளிவாக குறிப்பிட்டு விடுங்கள். அதனுடன் புரொபசனலாக ஒரு சமூக வலைத்தள கணக்கு விபரத்தினையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். இதை தொடர்ந்து, கல்வி தகுதி, ப்ராஜெக்ட்ஸ், வேலை முன் அனுபவம், ஸ்கில்ஸ் என்ற வரிசையில் Resumeல் குறிப்பிடுங்கள்.
முக்கியமாக hobbies குறிப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். இதில் இன்னும் சிலவற்றினை சேர்க்க விரும்புவர்கள். கல்வி தகுதியில் 12வது விபரங்களை நீக்கலாம். ஆனால் உங்களின் கல்லூரி தகுதிகளான இளநிலை, முதுகலை விபரங்கள் இருந்தால் நீக்கி விடாதீர்கள். பணி அனுபவத்தினை குறிப்பிடுவது ரொம்பவே முக்கியமான விஷயம்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் PCM முதல் EPass வரை… இந்திய மதிப்பில் Salary எப்படி இருக்கும்? தெரிஞ்சிக்கிட்டா செம வாழ்க்கை கியாரண்டி தான்!
இது Reverse chronical orderல் தான் இருக்க வேண்டும். அதாவது உங்களின் தற்போதைய பணி விபரத்தினை முதலில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அதை தொடர்ந்து அதற்கு முந்தைய விவரங்களை குறிப்பிடலாம். கடைசியாக உங்களின் முதல் பணி அனுபவம் குறித்து இருக்க வேண்டும். இதே ஃபார்மெட்டினை தான் கல்வி தகுதியிலும் பின்பற்ற வேண்டும்.
வேலை செய்து இருந்த ப்ராஜெக்ட்ஸில் உங்களின் பங்கு குறித்து ஷார்ட்டாக குறிப்பிடுங்கள். அது ஒன்று அல்லது இரண்டு வரிகளில் இருந்தாலும் தெளிவாகவும் பவர்புல் விஷயங்களாகவும் இருக்க வேண்டும். அது உங்களின் ரெசியூமின் பவரை அதிகரிக்கும். உங்களின் ரெசியூமில் பதிவிடப்படும் லிங்க் அனைத்துமே clickable linksஆக இருக்க வேண்டும். அதாவது க்ளிக் செய்தால் ஓபன் செய்வது போல இருக்க வேண்டும்.
ப்ரொஜெட்க்ஸ் வேலையே செய்யவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். அது ரொம்பவே முக்கியம் இல்லை. அது உங்க ரெசியூமின் வேல்யூவினை தான் அதிகரிக்க உதவும். ப்ரெஷராக இருந்தால் உங்கள் கல்வியின் கடைசி வருட ப்ரொஜெக்ட்டினை குறிப்பிடலாம். போட்டோ என்பதும் முக்கியமில்லை. ஒரே பக்கத்தில் ரெசியூம் ரெடி செய்வது தான் ரொம்ப முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.