சிங்கப்பூரில் பொது இடங்களில் சட்டவிரோத குதிரை பந்தய நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 50 முதல் 70 வயதுக்குட்பட்ட பதினைந்து ஆண்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் நேற்று (ஜூலை.22) தெரிவித்தனர்.
ஜூலை 7 மற்றும் ஜூலை 18 ஆகிய தேதிகளில் ஆங் மோ கியோ பகுதி காவல் அதிகாரிகள் ரிவர்வேல் கிரசண்ட் மற்றும் ஆங் மோ கியோ அவென்யூ 1 ஆகிய இடங்களில் இரண்டு அமலாக்க நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
$ 2,000 க்கும் அதிகமான பணம், ஐந்து மொபைல் போன்கள் மற்றும் பந்தய பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
63 முதல் 68 வயது வரையிலான எட்டு ஆண்களும், 50 முதல் 70 வயதுடைய ஏழு ஆண்களும் ரிவர்வேல் கிரசண்ட் மற்றும் ஆங் மோ கியோ அவென்யூ 1 ஆகிய பொது இடங்களில் சட்டவிரோத குதிரை பந்தயத்தில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை அனைத்துவிதமான சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்க பணியாற்றி வருவதாக கூறியுள்ளது.