காதலியின் பின்பக்கத்தில் கத்தியால் குத்தியதால் மலேசியாவின் Johor Bahru பகுதியில் சிங்கப்பூர் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். குத்தியவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குத்து வாங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த வழக்கில் சோதனை செய்த போது, இருவரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
34 வயதான அந்த நபர் கத்தியைப் பயன்படுத்தி தனது 29 வயது காதலியை வலது பின்பக்கத்தில் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் கமருல் ஜமான் மாமத் தெரிவித்தார்.
ஜோகூரில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் நேற்று (ஜூன் 2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகங்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்ததாக ‘தி ஸ்டார்’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (மே 31) அதிகாலையில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், தமான் மவுண்ட் ஆஸ்டினில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை 4.30 மணியளவில் நடந்த சம்பவம் நடந்ததாகவும் கமிஷ்னர் கமருல் ஜமான் கூறினார்.
மேலும், “அந்த தம்பதிகள் சில நாட்கள் தங்குவதற்காக குடியிருப்பில் ஒரு யூனிட்டை வாடகைக்கு எடுத்தனர். பிறகு அவர்கள் வசித்து வந்த போது ஒருநாள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அப்போது தான் அந்த ஆண் நண்பர் தனது காதலியின் பின்பக்கத்தில் கத்தியால் குத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.
குற்றம் அந்த நபர் மீது சாட்டப்பட்டிருந்தாலும், அந்த பெண்ணும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தம்பதியினர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் கமிஷ்னர் கமருல் ஜமான் கூறினார்.