சிங்கப்பூரின் புகழ்பெற்ற சாங்கி விமானநிலையம் சில தினங்களுக்கு முன்பு தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியது. கடந்த ஜூலை 1ம் தேதி 1981ம் ஆண்டு சாங்கி விமான நிலையம் பல பயணிகளுக்கு அதன் கதவுகளைத் திறந்த தினம். அது திறக்கப்பட்ட முதல் ஆண்டில் சுமார் 4.3 மில்லியன் பயணிகள் அந்த விமான நிலையத்தை பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாங்கி விமான நிலையம் அதன் கதவுகளை கடந்து செல்லும் அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கி வருகின்றது. பல முறை சாங்கி விமான நிலையம் சிறந்த விமான நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உலகின் பல நாடுகளில் இருந்து பல விதமான மக்களை வரவேற்கும் இந்த சாங்கி விமான நிலையம் பெரிய அளவில் பபுகழ்பெற்று விளங்குகிறது. தன்னை கடந்து செல்பவர்களுக்கு சிறந்த அனுபவத்தை தருகின்றது சாங்கி விமானநிலையம்.
கொரோனா போன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் சாங்கி விமான நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக இதன் 40ம் ஆண்டு விழா பெரிய எ;அளவில் கொண்டாட்டங்கள் இன்றி கொண்டாடப்பட்டது.