TamilSaaga

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் வழியில் சறுக்கி விழுந்த சுற்றுலா பேருந்து… மூன்று பேர் படுகாயம்!

சிங்கப்பூரிலிருந்து மலேசியா சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மலேசியாவில் உள்ள ஜோகூர் என்னும் நெடுஞ்சாலையில் பேருந்து சறுக்கி விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக இழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிசம்பர் 27ஆம் தேதி பயணிகள் மலேசியா நோக்கி செல்லும் பொழுது விடியற்காலை கிட்டத்தட்ட நாலு மணி அளவில் பலத்த மழை பெய்ததாக தெரிகின்றது. இதனால் சாலையில் தண்ணீர் அதிகமாக தேங்கியிருந்த காரணமாக பேருந்து சறுக்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது .அந்த சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலரும் விபத்து நடந்தது என்றே தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தனர் .பேருந்தில் இருந்த ஓட்டுநர் பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியே செல்ல உதவி செய்து அனைவரும் மீட்கப்பட்டனர். பேருந்தில் நான்கு குழந்தைகள் உட்பட 37 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related posts