TamilSaaga
Singapore Airlines

Singapore Airlines-ல் 300 பேருக்கு வேலை ரெடி – டக்கர் “ஜாப் ஆஃபர்” இதோ!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விரைவில் 100 விமானிகள் மற்றும் 200 கேபின் குழுவினரை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அதுவும் குறிப்பிட்ட சில மக்களை பணியமர்த்துவது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

நேற்று ஜூன் 13ம் தேதி வெளியான ஒரு அறிக்கையில், அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த முக்கிய தகவலை வெளியிட்டார். ஏற்கனவே விமானப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வேலை இழந்த ஊழியர்கள், தங்கள் வாழ்க்கையைத் மீண்டும் தொடர முடிந்தவரை உதவுவதே தங்கள் நோக்கம் என்றார் அவர்.

ஜெட்ஸ்டார் ஆசியா

சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆசியா, வருகின்ற ஜூலை 31ம் தேதியுடன் தனது சேவைகளை நிறுத்தவுள்ளது. இதன் காரணமாக சிங்கப்பூரில் சுமார் 450கும் அதிகமான விமானிகள் மற்றும் கேபின் குழுவினர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜெட்ஸ்டார் ஆசியா கடந்த ஜூன் 11ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அடுத்த ஏழு வாரங்களுக்கு சிங்கப்பூரிலிருந்து விமானங்களை தொடர்ந்து இயக்கும் என்றும். மேலும் ஜூலை 31ம் தேதியோடு அதன் இறுதி நாள் செயல்பாடுகள் முடிவடையும் என்று அறிவித்திருந்தது. ஆஸ்திரேலியா நாட்டு விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார் தனது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தனது சேவைகளை தொடரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைகொடுக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

இந்நிலையில் ஜெட்ஸ்டார் ஆசியா நிறுவனத்தில் பணியாற்றி, இப்போது பணியை இழந்துள்ள சுமார் 100 விமானிகள் மற்றும் 200 கேபின் குழுவினருக்கு வேலைவாய்ப்பை வழங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முன்வந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதிசெய்ய. ஜெட்ஸ்டார் ஆசியாவின் மூடல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, SIA குழுமம், ஜெட்ஸ்டார் ஆசியாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக SIAவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் “S பாஸ்” – 2025ம் ஆண்டில் வரவிருக்கும் மாற்றங்கள் என்னென்ன? – Detailed ரிப்போர்ட்!

வேலையிழந்து சோகத்தில் இருந்த பணியாளர்கள் பலருக்கும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எடுத்த இந்த முடிவு மிகவும் மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியாக மாறியுள்ளது என்றே கூறலாம்.

Related posts