சிங்கப்பூரை பொறுத்தவரை பொது சேவை பிரிவில் சுமார் 2,400 உடனடி “தொடக்க நிலை” (என்ட்ரி லெவல்) காலி பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நமது சிங்கப்பூர் மனிதவள அமைச்சக அமைச்சர் டான் சீ லெங்.
செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசிய அவர், தற்போது தங்களுடைய எதிர்காலம் நிச்சயமற்றதாகத் தோன்றினாலும், இளம் பட்டதாரிகள் தங்களுக்கான வேலை தேடும் படலத்தை தொடர வேண்டும் என்று அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.
2025ல் அதிகரித்த வேலைவாய்ப்பு
இந்த 2025ம் ஆண்டில், பல்கலைக்கழக பட்டதாரி குழுவின் வேலைவாய்ப்பு விகிதம் ஜூன் மாதத்தில் 51.9 சதவீதமாக இருந்தது என்றும், இது கடந்த ஜூன் 2024ல் இருந்த விகிதத்தை விட 4 சதவீதம் அதிகம் என்று அவர் கூறினார்.
“சிங்கப்பூரில் உள்ள பட்டதாரிகளும் அவர்களுடைய பெற்றோர்களும் பொறுமையோடு இருக்க வேண்டிய நேரமிது என்றார் அவர். இந்த ஆண்டு வேலைகள் மற்றும் பட்டதாரி வேலைவாய்ப்பு குறித்த தரவுகளை நாங்கள் மிகவும் நுணுக்கமாகவும் கவனமாகவும் ஆராய்ந்துள்ளோம். இது இன்னும் ஆரம்ப நாட்களில் இருந்தாலும், தரவுகளில் சில நல்ல அம்சங்களைக் காண்கிறோம்,” என்று நேற்று ஜூலை 10 அன்று சிங்கப்பூர் பொருளாதார மீள்தன்மை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினச் சிறப்பு: “Jump of Unity” பிரமாண்ட சாகசம்!
மேலும் இளம் பட்டதாரிகளின் மீது தங்களது வியாபார சிந்தனைகளை முதலீடு செய்யுமாறும், அது எதிர்கால சிங்கப்பூரை இன்னும் வலுப்படுத்தும் என்றும் வியாபாரிகளை கேட்டுக்கொண்டார் அவர். “ஜூன் 2025 ஐ ஜூன் 2024 உடன் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையில் வேலைவாய்ப்பு விகிதங்கள் அதிகரித்துள்ளன,” என்றும் அவர் மேலும் கூறினார்.