TamilSaaga

முக்கிய அறிவிப்பு! புழுவும் பூச்சியும் அங்கீகரிக்கப்பட்ட உணவாம்! சிங்கப்பூரின் தரமான மாற்றம்!

தாய்லாந்து, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் பல விதமான பூச்சிகள், புழுக்களை மக்கள் உண்பது சாதாரணம் தான். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அந்த மக்கள் அனைத்தையும் உண்டு பழகியதால் இது வழக்கமாகிப் போனது. ஆனால் இன்னும் பல ஆசிய நாட்டு மக்கள் இது போன்ற உணவுகளை உண்பதில்லை. 

ஆனால் தற்பொழுது சிங்கப்பூர் அரசாங்கம் இந்த உணவுகளை அங்கீகரித்துள்ளது. இனி சிங்கப்பூர் உணவகங்களில் பூச்சி, புழு, தேனீ போன்ற உணவுகளை நீங்கள் ஆர்டர் செய்து சாப்பிட முடியும். 

அத ஏனய்யா நான் சாப்பிடணும்னு பலர் கேக்குறது புரியுது! பயப்பட வேண்டாம் இந்த உணவுகளை சாப்பிடவும் எந்த பூச்சியை எந்த நிலையில் சாப்பிட வேண்டும் என்பதற்கும் SFA சில வழிகாட்டுதலையும் கொடுத்துள்ளது. மொத்தம் 16 வகையான பூச்சிகள் இதில் அடங்கும். 

அவற்றை சமைத்தோ, பதப்படுத்தியோ அல்லது பேக் செய்தோ விற்பனை செய்யலாம். இந்த முடிவு ஏப்ரல் 2023-ல் எடுக்கப்பட்டது ஆனால் தற்பொழுது தான் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பிரபலமான உணவகம் ஒன்றில் இந்த உணவுகள் சோதனைக்காக சமைக்கப்பட்டபொழுது பலர் இதனை உன்ன ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். பெரும்பாலும் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பூச்சிகள் சேர்த்து சமைக்கப்பட்ட உணவை உண்ண விரும்பியுள்ளனர். இதன் மூலம் தனது உணவகத்தின் வருவாய் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்த உணவாக உரிமையாளகர் தெரிவித்துள்ளார். 

மேலும் பல நிறுவனங்கள் பூச்சிகளை ஏற்றுமதி செய்து சிங்கப்பூரில் விற்பனை செய்யவும், பதப்படுத்தி விற்பனை செய்யவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. 

இது போன்ற உணவுகளை உன்ன பல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இனி சிங்கப்பூர் உணவகங்களில் விதவிதமான பூச்சிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணலாம். 

சிங்கப்பூர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பூச்சி வகைகள்:

  1. ஹவுஸ் கிரிக்கெட் (House Cricket) 
  2. பேண்டட் கிரிக்கெட் (Banded Cricket) 
  3. காமன் கிரிக்கெட் (Common Cricket) 
  4. டூ ஸ்பாட்டட்  கிரிக்கெட்(Two Spotted Cricket) 
  5. அப்பிரிக்கன் மைக்ரேட்ரி லோகஸ்ட் (African Migratory Locust)
  6. அமெரிக்கன் டெசர்ட் லோகஸ்ட் (American Dessert Locust) 
  7. க்ராஸ்ஹாப்பர் (Grasshopper) 
  8. சூப்பர்வார்ம் (SuperWorm) 
  9. மீல்வார்ம் (Mealworm) 
  10. லெஸர்மீல்வார்ம் (Lesser Mealworm) 
  11. கிரேட்டர் வேக்ஸ் மோத் (Greater Wax Moth) 
  12. லெஸர் வேக்ஸ் மோத் (Lesser Wax Moth) 
  13. சில்க்மோத்/சில்க்வார்ம் (Silkworm) 
  14. வைட் க்ரப் (White grub) 
  15. ஜெயன்ட் ரெனோ பீட்டில் க்ரப் (Giant Rhino Beatle Grub) 
  16. வெஸ்டர்ன் ஹனி பீ (Western Honey Bee) 

மேற்கண்டவற்றில் Cricket என்பது தமிழில் குரங்குப் பூச்சி என்ற வகையைச் சார்ந்தது, Locust என்பது வெட்டுக்கிளி வகைகள், Worm என்பது புழுக்கள் மற்றும் இதில் ஒரு தேன்பூச்சியும் உள்ளது. 

இவை அனைத்தையும் SFA அங்கீகரித்துள்ளதாக கடந்த 8-ம் தேதி அறிவிப்பு வெளியானது. இனி என்ன? மற்ற ஆசிய நாடுகளைப் போலவே பூச்சிகளை சுவைக்க தயாராகுங்கள்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts