Services: சிங்கப்பூருக்கு வேலைக்கு வரணும் என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் முதல் வழி என்னனு பார்த்தா? Skill டெஸ்ட் தான். அப்போ ஸ்கில் இல்லாம சிங்கப்பூர் வரவே முடியாதானு கேட்டீங்கனா? கண்டிப்பா வர முடியும். அதுக்கு நிறைய வழிகள் இருக்கு. அதில் இருக்கும் இரண்டு முக்கிய வழி குறித்து தான் இங்க பார்க்க போறோம். தொடர்ந்து படிச்சு தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வழிகள் இரண்டு முறையில சொல்லலாம். சிங்கப்பூரில் டெஸ்ட் இல்லாமல் வர படிச்சவங்களுக்கு வாய்ப்பு ஒருமாதிரியும், படிக்காதவங்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கும். முதலில் நீங்க படிக்கவே இல்லையா சிங்கப்பூரில் பார்க்க ஆசைப்பட்டால் கண்டிப்பா உங்களுக்கும் சிங்கப்பூரில் வேலை கிடைக்கும்.
Services sector:
நீங்கள் சிங்கப்பூரில் வேலைக்கு சேர ஆசைப்படும் போது உங்களுக்கு நம்பகமான ஏஜென்ட்டினை பாருங்கள். அவர்களிடம் உங்கள் கல்வி இல்லை எனக் கூறும்போதே அவரே உங்களுக்கென நல்ல வேலையை தேர்ந்தெடுப்பார். முக்கியமான Skill இல்லாமல் நீங்க வேலைக்கு சிங்கப்பூர் வர service துறைகளில் தான் வருவீர்கள்.
Services துறைகளின் கீழ் வரும் நிறுவனங்கள்:
*நிதி, insurance, ரியல் எஸ்டேட், இண்ஃபோகாம் மற்றும் பிசினஸ் சேவைகள்.
*போக்குவரத்து, storage மற்றும் தகவல் தொடர்பு சேவைகள்.
*Commerce (சில்லறை மற்றும் மொத்த வர்த்தகம்).
*Community, social மற்றும் தனிப்பட்ட சேவைகள் (வீட்டுப் பணியாளர்களைத் தவிர).
*ஹோட்டல்கள்.
*உணவகங்கள், காபி கடைகள், உணவு விடுதிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட உணவு நிறுவனங்கள்
இதில் ஒரு இடத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கும். இந்த வேலைகளிலும் OT இருக்கும். சம்பளமும் 1000 சிங்கப்பூர் டாலர் முதல் 2000 சிங்கப்பூர் டாலர் வரை இருக்கும். அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு Skill அடிக்கிறாங்கனு கேட்டீங்கனா? சிங்கப்பூரில் இந்த வகையில் வந்து வேலை பார்க்கும் போது உங்களால் தொடர்ந்து 2 வருடங்கள் மட்டுமே வேலை பார்க்க முடியும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு… S Pass வாங்க இதை Follow பண்ணுங்க..
அடுத்து, நீட்டிக்க வேண்டும் என்றால் உங்களின் கம்பெனி முதலாளி மனது வைத்தால் மட்டுமே முடியும். மேலும், சிலருக்கு சம்பளத்தில் பிடித்தம் கூட இருக்கும். தொடர்ந்து இந்தியா திரும்பி விட்டு சிங்கப்பூர் வரும்போது முதலில் கட்டிய தொகையை விட அதிகமாக கூட கொடுக்கும்படியாக இருக்கும்.
சரி நான் படிச்சிருக்கேன் இந்த முறையில் வரலாம் என்று கேட்டீங்கனா உங்களாலும் இப்படி சிங்கப்பூர் வர முடியும். இதற்கு ஏஜென்ட் கட்டணமாக 2 முதல் 3 லட்சம் வரை கூட கேட்பார்கள். அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஏஜென்ட் பொறுத்து மாறுபடும்.
நீங்கள் படித்த அதே துறையில் வேலைக்கு போக நினைத்தால் SPass அல்லது EPass அப்ளே செய்து அதில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரலாம். சிறிது அதிக காலம் எடுக்கும். மேலும் கட்டணமும் 5 லட்சம் வரை கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.