TamilSaaga

அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கனும்!! மூன்று அதிர்ஷ்டசாலிகள் S$12.6 மில்லியன் Toto Hong Bao லாட்டரி  ஜாக்பாட்டை வென்றனர்!!

இந்த ஆண்டுக்கான Singapore Poolsன் Toto Hongbao குலுக்கலில் வெற்றி பெறுபவருக்கு கிடைக்கப்போகும் பரிசுத் தொகை S$12 மில்லியன் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .

சிங்கப்பூரில் Hongbao டிரா என்பது சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு பிரபலமான புத்தாண்டு டிராவாகும். இது Chinese New year முன்னிட்டு நடத்தப்படும் ஒரு சிறப்பு டிராவாகும். Hongbao டிராவில் பொதுவாக மிகப்பெரிய பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. பல கோடி ரூபாய் வரை பரிசுத் தொகை வழங்கப்படுவதால், இது பலரையும் கவர்ந்து இழுக்கும்.

25-வது ஆண்டு விழா கொண்டாடும் Hong Bao Draw: 2000-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Hong Bao Draw இந்த ஆண்டு 25-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. கடந்த சில ஆண்டுகளில், ஹொங் பாவ் சீட்டுகள் சீன புத்தாண்டின் முதல் நாள் முதல் பதினைந்து நாட்களின் மத்தியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டன.

2025 பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற்ற டோட்டோ லாட்டரியின் குழு 1 பரிசுத் தொகை S$12.6 மில்லியனைத் தாண்டியது. இந்த மிகப்பெரும் பரிசு மூன்று வெற்றியாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதாவது, மூன்று பேர் இந்த ஜாக்பாட்டை வென்றுள்ளனர். ஒவ்வொருவருக்கும் S$4.2 மில்லியன் கிடைக்கும்.

Winning Numbers:

16 18 22 23 28 35

பரிசு வென்ற சீட்டுகள் மூன்று வெவ்வேறு இடங்களில் வாங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றி பெற்ற இரண்டு சீட்டுகள் 3 மெக்கல்லம் ஸ்திரீட்டில் அமைந்துள்ள 7-லெவன் கடையில் (க்விக் பிக் சிஸ்டம் 8 பதிவு) மற்றும் சிங்கப்பூர் பூல்ஸ் தோ பாயோ லோரோங் 4 கிளையில் (1 க்விக் பிக் சிஸ்டம் 7 பதிவு) விற்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு சீட்டு ஆன்லைனில் (1 க்விக் பிக் சிஸ்டம் 7 பதிவு) விற்கப்பட்டது.

அடுத்ததாக, குரூப் 2 பிரிவுக்கான பரிசுத்தொகை 36 சீட்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீட்டுக்கும் $73,857 பரிசுத் தொகை வழங்கப்படும்.

பெரிய ஜாக்பாட் தொகை காரணமாக, குலுக்கல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள வெள்ளிக்கிழமை மாலை சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிராங்கூனில் உள்ள நெக்ஸ் கடைத்தொகுதியில் இருக்கும் ஃபேர்பிரைஸ் சிங்கப்பூர் பூல்ஸ் கடையின் வெளியே மிகப்பெரிய வரிசையில் மக்கள் காத்திருந்தனர். கடைத்தொகுதி வளாகத்தைத் தாண்டியும், கார் நிறுத்துமிடத்திற்குச் செல்லும் வழிகள் வரைக்கும் கூட மக்கள் கூட்டம் நெரிசலாக இருந்தது. இந்த ஹொங் பாவ் ஜாக்பாட் எவ்வளவு பெரியது என்பதை இது காட்டுகிறது. வெற்றியாளர்கள் யார் என்பதை அறியவும், அதிர்ஷ்டம் தமக்கும் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ‘டோட்டோ ஹொங் பாவ் அதிர்ஷ்டக் குலுக்கு’ கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் பூல்ஸ் குழுமத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு சிறப்பு குலுக்கல், சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது பொதுவாக நடத்தப்படுகிறது. ஹொங் பாவ் என்பது சீன கலாச்சாரத்தில் பரிசுகளைக் குறிக்கும் மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. இந்த சிறப்பு குலுக்கலில், குழு 1 பரிசுத் தொகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், இது பலரை பங்கேற்கத் தூண்டுகிறது.

TOTO விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.

லாட்டரி என்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் சார்ந்தது மட்டுமே. எனவே, லாட்டரி சீட்டு வாங்குவதையே வாடிக்கையாக வைத்திருக்காமல் உழைப்பில் கவனம் செலுத்தும்படி வேண்டுகிறோம். மாதத்திற்கு 1 லாட்டரி சீட்டு என்பதே போதுமானது. வாராவாரம் வாங்குவது என்பது உங்கள் பணத்தை தான் வீணடிக்குமே தவிர, வேறு எந்த பயனும் இல்லை.

மேலும் தகவல்களுக்கு: https://www.singaporepools.com.sg/ms/rd25/en/index.html

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts