நாளை (ஜீன்.21) திங்கட்கிழமை முதல் இரண்டு பேர் குழுவாக மேசையில் அமர்ந்து உண்பதற்கு உணவகம் மற்றும் பானக் கடைகளுக்கு அரசு அனுமதித்துள்ளது.
இதனால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய உணவு வகைகள் மற்றும் விற்பனை விலையில் சலுகைகள் போன்ற ஏற்பாடுகளை கடைகள் செய்து வருகின்றன.
குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டாலும் மேசைகளுக்கு இடையே இரு குழுக்களும் 3 மீட்டர் இடைவெளி பின்பற்ற வேண்டும் போன்ற விதிமுறைகளுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தால் வருவாய் இழந்து இருக்கும் உணவு பானக்கடைகளுக்கு இந்த தளர்வுகள் மகிழ்ச்சியளிக்க கூடிய ஒன்றாக காணப்படுகிறது.