TamilSaaga

“சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – நெகிழவைத்த ASPN சீனியர் டெல்டா பள்ளி குழுமம்

சிங்கப்பூரில் உள்ள APSN டெல்டா சீனியர் பள்ளி ACE குழுமத்தின் ஆதரவுடன், அதன் மாணவர் தலைவர்களின் சேவை கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுவா சூ காங் தங்குமிடத்தில் உள்ள நமது புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களுக்கு 200 டோட் பைகளை வழங்க, தொடக்க மருத்துவ விநியோக நிறுவனமான நதீஃப் உடன் ஒத்துழைப்பு நல்கியது.

76 மாணவர் தலைவர்கள், தனிப்பயனாக்கப்பட்ட டோட் பைகளை பேக்கிங் செய்வதில் ஈடுபட்டனர், மேலும் இந்த பைகளில் ASPN சீனியர் டெல்டா பள்ளி வழங்கிய அலுமினிய பாட்டில், மைக்ரோ ஃபைபர் துண்டு, பவர் பேங்க், மற்றும் கை சுத்திகரிப்பு மற்றும் முகமூடிகள் ஆகியவை அளிக்கப்பட்டன. APSN டெல்டா சீனியர் பள்ளியைச் சேர்ந்த கல்வியாளர்களால் கடந்த வியாழக்கிழமை இந்த பைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு தொழிலாளர்களின் தங்குமிடத்தைப் பார்வையிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

“இந்த இக்கட்டான நேரத்தில் நமது நாட்டிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அளிக்கும் கடின உழைப்பை அங்கீகரிக்கும் விதத்தில், இந்த திட்டம் இயக்கப்பட்டது. “நமது மாணவர்கள், சமுதாயத்தில் சுறுசுறுப்பான பங்களிப்பாளர்களாக இருக்கும்போது இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது இந்த நிகழ்வு” என்று APSN டெல்டா சீனியர் பள்ளி மாணவர் தலைமைத்துவ மேம்பாட்டுத் தலைவர் நதிரா அகோஸ் கூறினார்.

APSN சீனியர் டெல்டா பள்ளிக்கு இந்த அர்த்தமுள்ள செயலில் ஈடுபட்டதற்காக தனது நன்றிகளை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts