TamilSaaga

சிங்கப்பூரில் அமலானது தளர்வுகள்.. உண்மையில் Mask போடாமல் எல்லா இடங்களுக்கும் போக முடியுமா? வெளியில் செல்லும் முன் இதை கொஞ்சம் படியுங்கள்

சிங்கப்பூர், இன்று செவ்வாய்கிழமை (மார்ச் 29) முதல் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நமது மிக முக்கியமான தளர்வு நடவடிக்கைகளைக் அனுபவிக்க துவங்கியுள்ளோம். உடற்பயிற்சி, உட்புற நிகழ்வுகள் வெளிப்புற நிகழ்வுகள் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக, முகமூடிகளே நம்மை ஆட்கொண்டிருந்தது. அதே நேரத்தில் வீட்டிற்கு இரண்டு பார்வையார்கள் மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு நிலவியது, பிறகு அது 5 பேர் என்று அதிகரிக்கப்பட்டது என்பதை எல்லாம் நாம் அறிவோம்.

சிங்கப்பூரில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து புது நிறுவனத்துக்கு அதிக சம்பளத்துடன் மாறுவது எப்படி? சீனியர்களின் Exclusive Tips

இந்நிலையில் கடந்த வாரம் மக்களிடம் முகநூல் வழியாக பேசிய நமது பிரதமர் பல தளர்வுகளை அறிவித்தார், அதன்படி இன்று (மார்ச் 29) முதல், மக்கள் வெளியில் செல்லும்போது முகமூடிகளை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. தனிநபர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக உணவகங்களில் கூடி உணவருந்தலாம். நேரலை நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்த அனுமதி உண்டு. 75 சதவிகித பணியாளர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு திரும்ப முடியும்.

சரி எங்கெல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை? எங்கெல்லாம் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்?

விளக்கம் தரும் படம் இதோ..

10 பேர் கொண்ட குழு

இன்று (மார்ச் 29) முதல் தனிநபர்கள் 10 பேர் கொண்ட குழுக்களில் கூடலாம், முன்பு ஐந்து பேர் வரை. பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளின் கீழ் கூடலாம் என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது இனி ஒவ்வொரு குடும்பமும் ஒரே நேரத்தில் 10 பார்வையாளர்களைப் பெறலாம். தடுப்பூசி போடப்பட்ட 10 பேர் கொண்ட குழுக்கள் உணவு மற்றும் பான விற்பனை நிலையங்களில் உணவருந்த அனுமதிக்கப்படும்.

F&B ஆபரேட்டர்களுக்கான செயல்பாட்டுச் சுமையை எளிதாக்க, அனைத்து நிறுவனங்களும் தங்கள் நுழைவாயிலில் முழு VDS சோதனைகள் தேவையில்லாமல், ஐந்து முழு தடுப்பூசி பெற்ற நபர்களைக் கொண்ட சிறிய குழுக்களை உட்கார அனுமதிக்கப்படுவார்கள். மேலும் F&B நிலையங்களில், இரவு 10.30 மணிக்குப் பிறகு மது விற்பனை மற்றும் நுகர்வு மீதான தற்போதைய கட்டுப்பாடு இன்று (மார்ச் 29) முதல் நீக்கப்படும். மேலும் அனைத்து இடங்களிலும் நேரடி நிகழ்ச்சிகள் நடந்த இன்று முதல் அனுமதி உண்டு.

சிங்கப்பூர்.. “பெண்ணை நிர்வாணமாக்கி 12 மணிநேரம் மிரட்டிய கொடூரன்” : 70,000 வெள்ளி வரை மோசடி – சிறப்பு வைத்தியம் தர காத்திருக்கும் சிங்கை போலீஸ்

நிகழ்ச்சிகளில் ஈடுபடுபவர்கள், 10 பேர் கொண்ட குழு அளவில் இருப்பது போன்ற நடைமுறையில் உள்ள பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும். இறுதியாக வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய 75% பணியாளர்கள் தங்கள் பணியிடத்திற்குத் இன்று முதல் திரும்பலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த தளர்வுகளே இன்று முதல் அமலாகின்றது, கூடுதல் தளர்வுகள் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் சிங்கப்பூரில் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts