TamilSaaga

சிங்கப்பூர் தேர்தல் 2025: மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியில்; மோடி, ஸ்டாலின் வாழ்த்து!

சிங்கப்பூர், மே 4: சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தல் 2025 முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) 65.57% வாக்குகளுடன் மாபெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 97 இடங்களில் 87 தொகுதிகளை பிஏபி கைப்பற்றியது. பாட்டாளிகள் கட்சி (Workers’ Party) 10 இடங்களில் வெற்றி பெற்றது.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், விரைவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் தலைவர் ஸ்பென்சர் இங் தேர்தல் முடிவுகள் குறித்து கூறுகையில், “எதிர்க்கட்சிகளிடையே போதுமான ஒற்றுமை இல்லை. இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என வருத்தம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஒவ்வொரு வாக்காளரும் சிறந்த வருங்காலத்தை விரும்புகின்றனர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பிற நாடுகளில் காணப்படுவது போல, சிங்கப்பூரில் அரசியல் மீது நம்பிக்கை இழப்பு அல்லது பிளவுவாத போக்கு எதுவும் இல்லை. இந்த நிலைமை நீண்ட காலம் தொடர வேண்டும். பொதுத் தேர்தலில் முழு முயற்சியுடன் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் எனது பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

தேர்தல் முடிவுகள்:

  • மக்கள் செயல் கட்சி (PAP): 87 இடங்கள்
  • பாட்டாளிகள் கட்சி (Workers’ Party): 10 இடங்கள்

தேர்தல் முடிவுகள் சிங்கப்பூரின் அரசியல் எதிர்காலத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு….. எப்படி Apply செய்வது? முழு விவரம்

Related posts