TamilSaaga

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வந்தாச்சு !! தொலைதூரம் இருந்தாலும் உறவுகளின் அருகாமையை உணர அருமையான யோசனை!!

தமிழர்கள் தொன்றுதொட்டு பாரம்பரியமாக கொண்டாடும் விழாக்களில் முதன்மையா தும், அவர்களின் வாழ்வியலோடு நேரிடையாக தொடர்புடையதுமான விழா என்றால் அது பொங்கல் பெருவிழா என்றே கூற வேண்டும்.

பொங்கல் விழா என்றாலே மனதில் என்றும் புது உற்சாகம் தான். விடுமுறையில் உறவுகளோடு இணைந்து, அன்பை பகிர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சியை இரட்டிபாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதே நேரத்தில், உறவுகளுக்காக பணியின் நிமித்தம் உறவுகளைப் பிரிந்து,தொலைதூரம் இருப்பவர்கள், தொழில்நுட்ப உதவியால் கைப்பேசி காணொளி வாயிலாகவே பொங்கல் விழாவை கொண்டாட நேரிடும்.அவ்வாறு உறவுகளோடு கொண்டாட முடியவில்லையே என்று வாடுபவரா நீங்கள்?

கவலையை விடுங்கள்! நீங்கள் உறவுகளோடு இல்லாவிட்டாலும், நண்பர்களோடு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட இதோ உங்களுக்காக ஒரு சிறந்த யோசனை.

தீபாவளி என்றால் சட்டென்று புத்தாடைகளும் பட்டாசுகளும் நினைவுக்கு வருவதைப் போன்று பொங்கல் என்றால் சர்க்கரைப் பொங்கல் இல்லாமல் விழா நிறைவுறுமா ?
வாருங்கள்! பொங்கல் விழாவின் நாயகனா ம் சர்க்கரைப் பொங்கலை எவ்வாறு எளிமையாக சுவையாக குக்கரில் செய்யலாம் என்று பார்க்கலாம்.
வீடு முழுதும் மணக்கும் வெல்லப்பாகின் மணத்தில் உறவுகளின் அருகாமையை உணருங்கள் !! நீங்கள் செய்த சர்க்கரைப் பொங்கல் புகைப்படத்தை அவர்களோடு பகிர்ந்து அவர்களுக்கும் உங்கள் அருகாமையைக் கொடுத்திடுங்கள்!!மகிழ்ச்சியைப் பெருக்கிடுங்கள்!!

சர்க்கரைப் பொங்கல் செய்திடத் தேவையானப் பொருட்கள்:

  • பச்சரிசி -1கப்
  • பாசிப்பருப்பு – ¼ கப்
  • வெல்லம் -2கப்
  • நெய் – 4 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி திராட்சை – தேவையான அளவு
  • ஏலக்காய் பொடி – சிறிதளவு
  • பால் – ½ கப்
  • தண்ணீர் – 3 கப்
  • உப்பு – 1துளி
  • செய்முறை:
  • முதலில் தேவையான முந்திரி திராட்சையை 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் வறுத்து தனியே வைக்கவும்.
  • முதலில் அரிசியையையும் பாசிப்பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து கழுவி எடுக்கவும்.அப்புறம் இரண்டையும் ஒரு குக்கரில் போட்டு 3 கப் தண்ணீரோடு ¼ கப் பாலையும் சேர்த்து, 1துளி உப்பையும் சேர்த்து 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும் .
  • பிறகு மற்றொரு பாத்திரத்தில், 2 கப் பொடியாக்கிய வெல்லத்தோடு, கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரைந்து நன்றாக கொதித்து வரும்போது வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது குக்கரில் ஆவி அடங்கியதும், வேகவைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை, ஒரு கரண்டியால் மசித்து, மீண்டும் அடுப்பில் வைத்து வடிகட்டிய வெல்லப்பாகை அதனுடன் சேர்த்து நன்றாக ஒரு கொதி வரும்வரை கிளறி இறக்கவும்.
  • பிறகு அதனுடன் தேவையான நெய்யையும் , வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி சிறிதும் சேர்த்தால் சுவையான சர்க்கரைப்பொங்கல் ரெடி!!

Related posts