TamilSaaga

சிங்கப்பூரில் உடற்பிடிப்பு நிலையங்களில் விதிமீறல்.. தற்காலிகமாக மூட உத்தரவு

சிங்ப்பூரில் செயல்பட்டு வரும் உடற்பிடிப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக காவல்துறை சோதனைகளை நடத்தி வருகின்றார்கள்.

கொரோனா காலகட்டத்தில் அரசின் தொற்று தடுப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றாத 20க்கும் மேற்பட்ட உடற்பிடிப்பு மையங்கள் காவல் துறை சோதனையில் கண்டறியப்பட்டு அவற்றை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அந்த மையங்களுக்கு சுமார் 1000 வெள்ளியும் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 300 வெள்ளியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி பின்பற்றுதல் முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை பின்பற்றாத மையங்கள் மீதான நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்பராமரிப்பு மற்றும் Sauna போன்ற தேவைகளுக்காக வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது மற்றபடி அனைத்து நேரத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம். இதனை உறுதிப்படுத்தும் நோக்கத்திலேயே சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

விதிகளை மீறி செயல்படும் உடற்பிடிப்பு மையங்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல் நீதிமன்றம் வாயிலாக கடுமையான தண்டனை வழங்கும் வாய்ப்புகளும் உள்ளது.

Related posts