தமிழகத்தின் திருச்சி மற்றும் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் அம்ரிஸ்டர் ஆகிய நகரங்களில் இருந்து முறையே டிசம்பர் 2, நவம்பர் 30 மற்றும் ஜனவரி 30, 2022 முதல் விமானங்களை சிங்கப்பூருக்கு இயக்கவுள்ளது Scoot விமான சேவை நிறுவனம். மேலும் திருச்சியில் இருந்து டிசம்பர் 2 முதல் 31 வரை சிங்கப்பூருக்கு இருமார்கமாக 30 விமானங்களை Scoot இயக்கவுள்ளது. இதற்கான முன்பதிவுகளும் தற்போது தொடங்கி நடந்து வருகின்றது.
இதையும் படியுங்கள் : தமிழகம் – சிங்கப்பூர் சேவைகளை தொடங்கும் Indigo
மேலும் மேற்குறிய மூன்று நகரங்களில் இருந்து சிங்கப்பூர் வர தற்போது கூடுதலாக கட்டண சலுகையையும் அறிவித்துள்ளது Scoot நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட முகநூல் பதிவில் “நீங்கள் சிங்கப்பூர் திரும்புவதை இன்னும் சிறப்பானதாக்க, இப்போது முதல் டிசம்பர் 5, 2021 வரை வெறும் 5,500 ரூபாய் முதல் ஒரு வழி பாதைக்கான விற்பனைக் கட்டணத்தை நாங்கள் அளிக்கின்றோம்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 450 நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தனது சேவைகளை தொடங்கியுள்ளது Scoot நிறுவனம். சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே தற்போது அமைக்கப்பட்ட Travel Bubble மூலம் மீண்டும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சேவையை அளிக்கவுள்ளது Scoot. இதற்கான அறிவிப்பை தனது முகநூல் பகுதியில் அண்மையில் அது வெளியிட்டுள்ளது. வரும் 30 நவம்பர் முதல் இந்த சேவை தொடங்க உள்ளது நினைவுகூரத்தக்கது.
மேலும் விமான பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது Scoot நிறுவனம், டிசம்பர் மாதம் 2ம் தொடங்கி 3,5,9,10,12,16,17,19,23,24,26,30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் – திருச்சி மற்றும் திருச்சி – சிங்கப்பூர் என்று இருமார்கமாக இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.