TamilSaaga

இன்று முதல் “Entry Approval” இல்லா சிங்கப்பூர் பயணம்.. காலையிலேயே டிக்கெட் முன்பதிவுக்கு குவிந்த “Work Permit Holders” – இன்டர்நெட் முடங்கும் அளவுக்கு புக்கிங்

சிங்கப்பூர் அரசின் புதிய அறிவிப்பின் படி, இன்று (ஏப்.1) முதல், முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் “Entry Approval” இல்லாமல் சிங்கப்பூர் வரலாம். ஆனால், பலரது கேள்வி என்னவெனில், Work Permit holders-களும் சிங்கப்பூர் வர முடியுமா? என்பது தான்.

கடந்த மார்ச் 24ம் தேதி, சிங்கப்பூரின் பெருந்தொற்று நிலை குறித்து பேசிய நமது பிரதமர் லீ சில முக்கிய தளர்வுகளை அறிவித்தார். அதன்படி, “இனி முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள், 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் மார்ச் 31 இரவு 11.59 மணி முதல், சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன் அவர்கள் எடுக்கவேண்டிய “Pre Departure Test மட்டும் எடுத்தால் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். எனவே இனி சிங்கப்பூர் நுழைய “Entry Approval” தேவையில்லை என்று அறிவித்தார்.

மேலும் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART சோதனையும் எடுக்க வேண்டியதில்லை. தினசரி சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தவித Quotaகளும் இருக்காது என்றும், Entry Approval இனி அவசியமில்லை என்றும் பிரதமர் அறிவித்தார்.

எவ்வாறாயினும், புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நடத்தப்படும் Pre Departure Test அமலில் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெளிவுபடுத்தியுள்ளது. முழுமையாக தடுப்பூசி போடாத நீண்ட கால அனுமதி பெற்றவர்கள் (Long Term Pass Holders) மற்றும் 13 வயது மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் (Short Term Pass Holders) சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சிங்கப்பூரில் ஒரேயொரு தடுப்பூசி மட்டும் போட்டவரா நீங்க? உங்களால் இந்தியா போக முடியுமா? – ஏர்போர்ட்டில் என்னென்ன ஆவணங்கள் கொடுக்கணும்? – Complete Report

இந்நிலையில், Work Permit holders-களும் இதுபோன்று Entry Approval இல்லாமல் சிங்கப்பூர் வர முடியுமா? என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து நாம் திருச்சி விமான நிலையத்தில் இயங்கி வரும் பிரபல டிக்கெட் புக்கிங் ஏஜென்சியான “நந்தனா டிராவல்ஸ்”-ஸிடம் பேசினோம்.

“முதலில் சிங்கப்பூர் அரசின் இந்த புதிய உத்தரவை, எந்த விமான நிறுவனங்களும் இதுவரை அமல்படுத்தவில்லை. இந்த நிமிடம் வரை அமல்படுத்தவில்லை. நேற்று இரவு வரை வழக்கமான நடைமுறைகளின் படியே விமானங்கள் இயங்கின. எங்களிடம் ஏகப்பட்ட work permit holders டிக்கெட் புக்கிங் செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.

இதனால் நாங்கள் தெளிவாக முன்கூட்டியே சில விஷயங்களை அவர்களிடையே தெளிவு செய்து விடுகிறோம். அதாவது, இதுவரை எந்த விமான நிறுவனங்களும், இந்த புதிய நடைமுறையை பின்பற்றாததால், எந்த நேரம் வேண்டுமானாலும் டிக்கெட் கேன்சல் செய்யப்படலாம் என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறோம்.

நியாயமான காரணங்களுக்காக.. 6 மாதத்துக்குள் “Migrant domestic Worker”-ஐ வேலையை விட்டு நிறுத்தினால்.. 50% கட்டணம் “Cashback” – MOM உத்தரவு

யாரையும் நம்பி இங்கு பயணிகளுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. இந்த நொடி வரை work permit holders-களுக்கும் டிக்கெட் புக்கிங் செய்கிறோம். ஆனால், entry approval அவசியம் என்று சொல்லிவிட்டால், நிச்சயம் டிக்கெட் கேன்சல் செய்யப்படும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் “Cancellation Fee” எடுத்துக் கொண்டு பாக்கியைத் தருவார்கள்.

Scoot மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பணமும் திரும்ப வராது. எனவே, இதனை டிக்கெட் புக்கிங் செய்யச் சொல்லும் work permit holders-களிடம் முன்னதாகவே தெரிவித்துவிடுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts