புது வருடம்னாலே Countdown கொண்டாட்டம் தான்! எல்லா மக்களும் ஒரு இடத்துல சேர்ந்து இரு பெரிய திரைல Countdown வர வருடம் துவங்கும் நேரத்தை ஆனந்தமா கொண்டாடுவாங்க!
இந்த கொண்டாட்டம் மிக பிரம்மாண்டமா நடக்கும் அங்கங்க கூடுற மக்கள் கூட்டம்! அந்த விழாவை ஏற்று நடத்தும் குழுக்கள் என புது வருட கொண்டாட்டத்துக்கு ஏராளமான ஏற்பாடுகள் நடக்கும்.
அடுத்த வருடம் இனிமையா இருக்கனும்னு ஒவ்வொருவரும் முகம் தெரியாதவர்களுக்கு வாழ்த்து கூறும் போது அவ்வளவு சந்தோஷம் இருக்கும்.
சிங்கப்பூரில் புது வருடத்தைத் துவங்கப் போகும் தமிழ் சொந்தங்களுக்கு ஒரு சின்ன தகவல் தான் இந்தப் பதிவு! இந்த வருடம் எங்கெல்லாம் புது வருட கொண்டாட்டம் நடைபெறுதுனு தெரிஞ்சுகிட்டு உங்க கொண்டாட்டத்தை பிளான் பண்ணுங்க!
- Hougang
Haugang பக்கத்துல உள்ள திறந்தவெளியில் வான வேடிக்கைகளோட இந்தக் கொண்டாட்டம் நடக்கப் போகுது.
நேரம்: இரவு 10 மணி முதல் 12.30 வரை. - Ang Mo Kio
Mayflower Market முன்புறம் உள்ள Hard Court-ல இந்த கொண்டாட்டம் நடக்குது. இசைக்கச்சேரி, நடனம், விளையாட்டுகள் என எக்கச்சக்க Entertainment வெயிட்டிங்!
நேரம்: மாலை 5 மணி முதல் 12.30 வரை - Bishan Active Park
Bishan தெரு 23-ல இந்த கொண்டாட்டம் நடைபெறுது. இங்கும் உங்களுக்காக பிரத்தியேக இசைக் கச்சேரிகள் மற்றும் பல ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
நேரம்: 5 மணி முதல் 12.30வரை - Boon Lay
Boon Lay block 215 ல உள்ள Hard Court ல இந்தக் கொண்டாட்டம் நடக்கப் போகுது. இந்தக் கொண்டாட்டம் சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்டு-ல இடம் பிடிக்கப் போகுதாம்! So Don’t Miss It!
நேரம்: மலை 7 மணி முதல் 12.30 வரை - Bukit Batok
Sky Peak Central Gardan-ல இந்தக் கொண்டாட்டம் நடைபெற இருக்கு. இங்க வர மக்கள் தங்களுக்கு விருப்பமான உடை அலங்காரத்துல வரலாம் அதாவது கலாச்சார உடைகள் பழமையான உடைகள் என தனித்துவமான ஆடை அலங்காரம் செஞ்சுட்டு வரலாம். இது தவிர இசைக் கச்சேரிகளும் இருக்கு.
நேரம்: 6 மணி முதல் 12.15 வரை - Bedok Stadium
Graffiti கலைஞரான Zero இந்தக் கொண்டாட்டத்தை வழிநடத்த உள்ளார். ஆர்ட் வொர்க், உங்கள் எதிர்கால திட்டத்தை எழுதுவதற்கான இடம் என வித்தியாசமான தீம்-ல் இங்கு கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
நேரம்: 8 மணி முதல் 12.15 மணி வரை - Bukit Panjang
Senja Cashew Community Club 2000 பேருக்கு மேல் LED Wristband மூலம் ஒளிக் காட்சி அமைக்கவுள்ளனர். இங்கும் உணவு, இசை என ஏராளமான பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடக்கவுள்ளன.
நேரம்: இரவு 9 மணி முதல் 12.30 மணி வரை
- Jalan Besar
People’s Association HQ வைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இதில் சிங்கப்பூர்-ன் வளர்ச்சி குறித்த லேசர் விளக்கு காட்சிகளும் இடம்பெறவுள்ளன.
நேரம்: இரவு 8.30 மணி முதல் 12.15 மணி வரை
- Choa Chu Kang
Choa Chu Kang-ல் உள்ள Concord Primary School அருகில் உள்ள Hard Court-ல் இந்தக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. சிங்கப்பூரின் 60-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் SG60 Tapestry of Hope முயற்சியின் கீழ் 2025 பேர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ள இங்கு அழைக்கப்படுகின்றனர்.
நேரம்: இரவு 8 மணி முதல் 12.15 வரைMacPherson - Marine Parade
Block 46 Marine Crescent முன் உள்ள Hard Court-ல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் 2024 முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இது தவிர இசைக் கச்சேரிகள், உணவு விடுதிகள் என ஏராளமான பொழுதுபோக்குகளும் வரவுள்ளன.
நேரம்: இரவு 10 மணி முதல் 12.15 மணி வரை
- Marshiling
Woodland Statium-ல் இந்தக் கொண்ண்டாட்டம் நடைபெறவுள்ளது. இங்கு இசைக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது, பார்வையாளர்களும் வாசித்து மகிழலாம். இது தவிர பல கலாச்சார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நேரம்: இரவு 8 மணி முதல் 12.30 வரை
- Nee Soon
FutsalArena @ Yishun அருகில் உள்ள திறந்த வெளியில் இந்தக் கொண்டாட்டம் நடைபெறப்போகிறது. இங்கும் Community Canvas போன்ற குழுவாகப் பங்குபெறக் கூடிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நேரம்: 8 மணி முதல் 12.30 வரை - Punggol West Community Square
Block 218 Sumang Walk-ன் அருகில் உள்ள Hard Court-ஆன Punggol West Community Square-ல் இந்தக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.இங்கு இசைக் கச்சேரிகள், மேஜிக், விளையாட்டுகள் என ஏராளமான பொழுதுபோக்குகள் அமைக்கப்படவுள்ளன.
நேரம்: 8:30 மணி முதல் 12.10 வரை
- Our Tampines Hub மற்றும் Tampines Central Park
K-பாப் பாடல்களுக்கு நடனம், இசை நிகழ்ச்சிகள் வானவேடிக்கை என பல விதமான கொண்டாட்டங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன. இதில் சிறப்பு என்னவென்றால், பார்வையாளர்களும் இந்த நாடன நிகழ்வில் பங்குகொள்ளலாம்.
நேரம்: இரவு 10 மணி முதல் 12.30 வரை - MacPhersonMacPherson Community Club அருகில் உள்ள Hard Court-ல் இந்தக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இங்கும் வானவேடிக்கை இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நேரம்: 8 மணி முதல் 12.30 மணி வரை
என்ன நீங்க எந்த கொண்டாட்டத்துக்கு போக போறீங்க? சீக்கிரம் பிளான் பண்ணுங்க இந்த புது வருடத்தை சிங்கப்பூரில் துவங்க இருக்கும் சொந்தங்களுக்கு இந்த பதிவை ஷேர் செய்து, குழுவா உங்க கொண்டாட்டத்தை பிளான் பண்ணுங்க!