சிங்கப்பூரில் வேலைக்கு வர எத்தனையோ பாஸ் இருந்தாலும், உண்மையில் ஒருவரது வாழ்க்கையை இங்கு செட்டில் செய்வது என்றால் அது E-Pass மட்டுமே. பெரிய சம்பளம், நல்ல வேலை, நல்ல வாழ்க்கை என்று உங்களை சுற்றியுள்ள கடன்களை அடைத்துவிட்டு, உங்களையும் வாழ்க்கையில் செட்டிலாக்கும் பாஸ் இது.
இந்த பாஸ் பெறுவதற்கு நீங்கள் University Topper-ஆகவோ, வகுப்பில் நம்பர்.1 ஸ்டூடண்ட்டாகவோ, படிப்பே வாழ்ககையே கொண்டவராக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஒரு சாதாரண காலேஜில் நீங்கள் இன்ஜினியரிங் படித்தவராக, 70% மார்க் வைத்திருப்பவராக இருந்தாலே போதும்.
தாம்..தூம் என்று எதுவும் தேவையில்லை. கையில் டிகிரி.. கூடவே இந்தியாவில் வேலை செய்ததற்கான பணி அனுபவம்.. எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் Professional-ல் உங்களுக்கு இருக்கும் Knowledge. இது மூன்றும் உங்களிடம் இருந்தால், நீங்கள் தாராளமாக E-Pass-க்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம், E-Pass அப்ளை செய்யும் போது, சில ஆவணங்கள் கட்டாயம் சிங்கப்பூர் மனித வளத்துறையின் கோட்பாடுகளின் படி தான் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், தற்போதைய நிலவரப்படி இந்த பாஸுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு என்னென்ன என்றும் இங்கு பார்ப்போம்,
முதலில் உங்கள் பாஸ்போர்ட்டில் பெயரில் ஏதும் மாற்றம் இருந்தால், அதற்கு ஏற்ற சரியான விளக்கக் கடிதம் மற்றும் முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு கல்வி ஆவணங்கள் இங்கு ரொம்ப முக்கியம். நீங்கள் படித்த கல்லூரியின் அனைத்து செமஸ்டர் தேர்வுகளின் Certificates-ம் நீங்கள் ஒன்றுவிடாமல் கையில் வைத்திருக்க வேண்டும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், Notary Public மூலம் வழங்கப்பட்ட கல்வி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படாது. அதுமட்டுமின்றி, E Pass-ஐ பொறுத்தவரை, சில துறைகளில் நீங்கள் வேலைக்கு சேர வேண்டுமெனில், அந்தந்த துறையின் அதிகாரப்பூர்வ அமைப்பிடம் இருந்து Certificate பெற வேண்டும்.
| உதாரணமாக, பல் மருத்துவர் வேலைக்கு வர வேண்டுமெனில், சிங்கப்பூர் பல் மருத்துவ கவுன்சில் இருந்து Certificate பெற வேண்டும். Radiologic technologists என்று அழைக்கப்படுகிற ரேடியோகிராஃபர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில், சிங்கப்பூரின் AHPC-ல் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், மருத்துவராக வர வேண்டுமெனில், சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலிடம் இருந்து ஆவணம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், அவசர உதவி டெக்னீசியன் பணிக்கு வர வேண்டுமெனில், சிங்கப்பூரின் Prehospital Emergency Care in Singapore-ல் ஆவணம் பெற வேண்டும். வழக்கறிஞராக வர வேண்டுமெனில், சிங்கப்பூர் Legal Services Regulatory Authority-யிடம் அனுமதி பெற வேண்டும். Occupational therapist, Physiotherapist, Radiation therapist, Speech therapist ஆகியோர் Allied Health Professions கவுன்சிலிடம் Document வாங்கி இருக்க வேண்டும். |
தற்போதைய வயது வரம்பு:
பிரிவு | புதிய விண்ணப்பங்கள் மற்றும் Renewal-களுக்கான தற்போதைய குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் வரும் செப்டம்பர் 1, 2023 இலிருந்து | செப்டம்பர் 1, 2023க்கு முன் Renewal-களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் |
அனைத்து துறைகள் (நிதி சேவை துறைகள் தவிர) | குறைந்தது $5,000 (வயது 23ல் இருந்து படிப்படியாக அதிகரிக்கிறது, 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் $10,500 வரை) | $4,500 (வயது 23ல் இருந்து படிப்படியாக அதிகரிக்கிறது, 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் $8,400 வரை) |
நிதி சேவைகள் துறை | குறைந்தபட்சம் $5,500 (வயது 23ல் இருந்து படிப்படியாக அதிகரிக்கிறது, 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் $11,500 வரை) | $5,000 (வயது 23ல் இருந்து படிப்படியாக அதிகரிக்கிறது, 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் $9,300 வரை) |
சிங்கப்பூர் மனிதவளத்துறையின் இந்த அறிவிப்பின் படி, வரும் செப்.1, 2023 முதல் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட E-Pass ஊழியர்கள் தங்கள் பாஸை புதுப்பிக்கும் போது அவர்களது சம்பளம் தற்போதுள்ள 8,400 டாலர்கள் சம்பளத்தில் இருந்து 10,500 டாலர்கள் வரை உயருகிறது. ஸோ, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.