TamilSaaga

“மின்சார சக்தியில் இயங்கும் டாக்ஸி” – இம்மாத இறுதியியல் வெளியிட ஆவணம் செய்யும் சிங்கப்பூர் SMRT

சிங்கப்பூரின் பிரபல போக்குவரத்து குழுமமான எஸ்.எம்.ஆர்.டி இந்த மாதத்தின் இறுதியில் தனது மின்சார டாக்ஸியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நமது நாட்டின் மிகப்பெரிய டாக்ஸி நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள எஸ்.எம்.ஆர்.டி சுமார் 1200க்கும் அதிகமான டாக்ஸியை தற்போது தன் வசம் வைத்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்படும் 300MG ரக டக்ஸிங்க்ளை தற்பொழுது அந்த நிறுவனம் சீனாவிடமிருந்து வாங்க உள்ளது. இந்த டாக்ஸிகளை யூரோ­கார்ஸ் நிறுவனம் விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆயிரத்து 700 க்கும் அதிகமான டாக்ஸிகளின் ஒப்பந்த மதிப்பீடு கிட்டத்தட்ட 30 மில்லியன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மின்சார டாக்ஸிகளின் வருகையை அடுத்து ஓட்டுனர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் SMRT நிறுவனம் அதன் வாடகையை குறைக்க ஆவணம் செய்து வருவதாக ஸ்ட்ராயிட் டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் இவ்வகை எலக்ட்ரிக் டாக்சிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மாசு இல்லாத வருங்கால சிங்கப்பூருக்கு இது மிகவும் அவசியமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

Related posts