TamilSaaga

“செம டேஸ்ட்டாம்”.. சிங்கப்பூரில் அமோகமாக விற்பனையாகும் “வினோதமான பீர்” – எந்த தண்ணீரில் தயாரித்த பீர் தெரியுமா?

சிங்கப்பூரை கலக்கி வருகின்றது “NEW Brew” என்ற புதுவகை மதுபானம், “New Brew” என்பது சாதாரண பீர் அல்ல, சிங்கப்பூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது இந்த பீர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மதுபானம் நமது நாட்டின் தேசிய நீர் நிறுவனமான PUB மற்றும் உள்ளூர் கைவினை மதுபானம் தயாரிக்கும் Brewerkz ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு பணியாள் உருவான ஒன்றாகும். கடந்த 2018ல் நடந்த Water Conferenceல் முதன்முதலில் இது வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தான் NEWBrew கடந்த ஏப்ரல் மாதம் முதல் சூப்பர் மார்க்கெட்களிலும் Brewerkz விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு வந்தது.

“சிங்கப்பூருக்காக உழைத்த புலம்பெயர் தொழிலாளர்கள்..” பெருமைப்படுத்திய சிங்கை – பிரத்தியேகமாக திறக்கப்பட்ட காட்சியகம்

“இது கழிவறையில் இருந்து சேமிக்கப்பட்ட நீரை சுத்தப்படுத்தி செய்த பீர் என்று என்னால் நம்ப முடியவில்லை,” என்று 58 வயதான செவ் வெய் லியான் கூறினார். இந்த சிங்கப்பூரர் இந்த பீர் குறித்து கேள்விப்பட்ட பிறகு அதை முயற்சி செய்ய ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து இந்த பீரை வாங்கியுள்ளார். பீர் போன்ற ருசியே அதிலும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் அரிய வகை தவளை கண்டுபிடிப்பு – தமிழ் வம்சாவளியை சேர்ந்தவரின் பெயரை சூட்டி பெருமைப்படுத்திய சிங்கை

நிலையான நீர் பயன்பாடு மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை சிங்கப்பூரர்களுக்கு உணர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியே புதிய பீர் என்று PUB கூறுகிறது. கழிவுநீரை குடிநீராக மாற்றும் யோசனை, ஒரு காலத்தில் சிங்கப்பூரில் பெரிதும் எதிர்க்கப்பட்டது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் உலகின் புதிய நீர் வழங்கல் அதிகளவில் அழுத்தத்தில் இருப்பதால் இந்த யோசனை தொடர்ந்து ஆதரவை பெற துவங்கியுள்ளது. உலக அளவில் 2.7 பில்லியன் மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதமாவது தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts