TamilSaaga

சிங்கப்பூரில் இந்தியன் ஃபேஷன்: Myntra-வின் சர்வதேச சிக்ஸ்!

Flipkart-க்குச் சொந்தமான ஃபேஷன் இ-காமர்ஸ் நிறுவனமான Myntra, சர்வதேச கப்பல் சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்காக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு, உள்நாட்டு இந்திய ஃபேஷன் பிராண்டுகளைக் கொண்டு செல்லும் ஒரு முக்கிய முயற்சியாகும்.

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, சிங்கப்பூரில் 6.04 மில்லியன் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்திய பண்டிகைகள், திருமணங்கள் போன்ற விசேஷங்களுக்குத் தேவையான இந்திய ஃபேஷன் தயாரிப்புகளின் தேவை அதிகமாக உள்ளது. இதை Myntra CEO நந்திதா சின்ஹா, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். Myntra தளத்திற்கு சிங்கப்பூரில் இருந்து மாதந்தோறும் 30,000 பேர் பார்க்குறாங்க. ஒட்டுமொத்தமாக, Myntra தளத்தில் மாதந்தோறும் 70 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

Myntra-வின் சேவை அம்சங்கள்:

  1. 100 க்கும் மேற்பட்ட இந்திய ஃபேஷன் பிராண்டுகள் வழங்கப்படும்.
  2. 100,000 பொருட்களாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
  3. இந்தியாவில் இருந்து பொருட்கள் 4-7 நாட்களில் அனுப்பப்படும்.
  4. சிங்கப்பூரில் உள்ள இந்திய நுகர்வோரில் 12-15% பேரை சென்றடைவதை Myntra நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுருக்கமா சொல்லணும்னா, Myntra சிங்கப்பூர்ல தனியா கடை, ஆபீஸ் எதுவும் திறக்கலை. அவங்க ஏற்கனவே எந்தெந்த பிராண்டுகளோடல்லாம் தொடர்புல இருக்காங்களோ, அதேபோல அவங்ககிட்ட இருக்கிற டெக்னாலஜிய வெச்சுதான் சிங்கப்பூர் மக்களுக்கும் பொருட்களை அனுப்பப் போறாங்க.

சிங்கப்பூர்ல ஆன்லைன் ஷாப்பிங் ரொம்பவே வளர்ந்திருக்கு. அமெரிக்காவின் வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் சொல்றபடி, 2022-ல சிங்கப்பூர்ல ஆன்லைன் வழியா நடந்த மொத்த வியாபாரம் $8.2 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்திருக்கு. இது 2025-ல $11 பில்லியனா உயரும்னு எதிர்பார்க்குறாங்க.

என்னென்ன பொருட்கள் அதிகம் விற்பனையாகுது?

2022-ல ஆன்லைன் விற்பனையில கணினி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் 47.4% அளவுக்கு முன்னிலை இருக்கிறது. வீட்டுக்குத் தேவையான furnitures, ஃபேஷன் (ஆடைகள்), உணவு, அழகு சாதனப் பொருட்கள், பொம்மைகள் போன்றவையும் ஆன்லைன்ல நல்லா விற்பனையாகுது.

சிங்கப்பூர்ல 3.51 மில்லியன் (35 லட்சத்திற்கும் மேலான) மக்கள் ஆன்லைன்ல பொருட்கள் வாங்குறாங்க. அங்க Shopee, Lazada, Aliexpress, Amazon, Zalora போன்ற பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நிறைய இருக்கு.

சர்வதேச போட்டி மற்றும் Myntra-வின் திட்டம்:

Amazon போன்ற பிற இ-காமர்ஸ் தளங்களும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கின்றன. உதாரணமாக, Amazon இன் உலகளாவிய விற்பனைத் திட்டம் 2015 முதல் 1.50 லட்சம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 40 கோடிக்கும் அதிகமான ‘Made in India’ தயாரிப்புகளை உலகளவில் விற்க உதவியுள்ளது. Myntra நிறுவனம் தனது இணையதளத்திற்கு வரும் பார்வையாளர்களில் 10 முதல் 15% பேர் வெளிநாடுகளில் இருந்து வருவதாகக் கூறியுள்ளது.

Myntra CEO சின்ஹா சொன்னது: “இப்போதைக்கு, எங்க வெப்சைட்டுக்கு வர்றவங்கள்ள 10-15% பேர் வெளிநாட்டு சந்தைகளில் இருந்துதான் வர்றாங்க. அவங்க பல இடங்கள்ல பரவி இருக்காங்க. அதைத்தான் நாங்க ஒரு நல்ல வாய்ப்பா பாக்குறோம். இப்போதைக்கு, நாங்க சிங்கப்பூர்ல இந்த சர்வீஸை ஆரம்பிச்சு, இதுல இருந்து நிறைய கத்துக்கலாம்னு இருக்கோம். சிங்கப்பூர்ல இருக்கிற இந்திய மக்கள்ல கிட்டத்தட்ட 12-15% பேரை நாங்க சென்றடைவோம்னு நம்புறோம்.”

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

பொருட்களோட விலை, ஷிப்பிங் செலவுகள் – சில முக்கிய விஷயங்கள்:

பொருட்களின் விலையை பிராண்டுகளே நிர்ணயிக்கும் என்றும், கப்பல் செலவுகள் மற்றும் இறக்குமதி வரிகள் ஆர்டர்களுக்குப் பொருந்தும் என்றும் சின்ஹா ​​கூறினார். Myntra முன்னாடி மத்திய கிழக்கு நாடுகள்ல அங்க இருக்கிற சில ஆன்லைன் தளங்களோட சேர்ந்து குறிப்பிட்ட சில பிராண்டுகளை மட்டும் விற்க முயற்சி செய்தார்கள். ஆனால் இப்போ, நேரடியாவே நம்ம இந்திய பிராண்டுகளை வெளிநாட்டுல இருக்கிற நம்ம இந்திய மக்களுக்குக் கொண்டு போறதுல கவனம் செலுத்துகிறார்கள் .

Myntra-வின் புது வழிமுறை:

சிங்கப்பூர்ல Myntra தனியா ஆபீஸ்ஸோ, கிடங்கோ எதுவும் திறக்கப் போறதில்ல. இந்தியாவுல இருந்தே நேரடியாக பொருட்களை அனுப்ப முடிவு பண்ணிருக்காங்க. ஏற்கனவே இருக்கின்ற இணையதளத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. Myntra ஆடை, காலணி, வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வகைகளில் Aurelia, Global Desi, Libas, Bombay Dyeing, Rare Rabbit போன்ற 100 பிராண்டுகளில் இருந்து 35,000 க்கும் மேற்பட்ட ஸ்டைல்களை வழங்கும்.

Myntra-வின் எதிர்காலத் திட்டம்:

Myntra-வோட பெரிய வளர்ச்சித் திட்டத்துல, “Myntra Global”ங்கறது அடுத்த சில வருஷங்கள்ல புது வாடிக்கையாளர்களை ஈர்த்து, உலக அளவுல பிராண்டுக்கு நல்ல பெயரை உருவாக்க உதவும்.

Walmart-க்கு சொந்தமான Flipkart குழுமத்தோட ஒரு பகுதியான Myntra, 2007-ல ஆரம்பிச்சு, ஆன்லைன்ல ஃபேஷன் மற்றும் வீட்டுப் பொருட்களை விற்கிறது. போன வருஷம் Myntra-வோட வருமானம் 14.7% அதிகரித்து ₹5,121.8 கோடியாக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு….. எப்படி Apply செய்வது? முழு விவரம்

Related posts