TamilSaaga

“சிங்கப்பூரில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான மாதாந்திர ஊதியம் அதிகரிக்கும்” – STC அறிவிப்பு

சிங்கப்பூரில் பாதுகாப்பு முத்தரப்புக் குழுவின் (STC) பரிந்துரைகள் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், வரும் 2023 ஆண்டு முதல், சிங்கப்பூரில் பாதுகாப்பு அதிகாரிகளின் அடிப்படை ஊதியம் ஆறு ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 3 சதவீத அதிகரிப்பு அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிட்ட STC, 2023ம் ஆண்டில் பாதுகாப்பு அதிகாரிகளின் மாத ஊதியத்தில் “குறிப்பிடத்தக்க அதிகரிப்பு” இருக்கும் என்று கூறியது.

அதாவது, 2022 முதல் 2028 வரை மிகக் குறைந்த தரவரிசையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் மாதாந்திர மொத்த ஊதியம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று STC இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) வெளியிட்ட ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டிற்கான மாதாந்திர மொத்த ஊதியம், அடிப்படை ஊதியம் மற்றும் 72 கூடுதல் நேர நேரங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரிகளுக்கான அடிப்படை ஊதியம் 2023ல் 1,650 வெள்ளியாக இருந்து. 2028க்குள் அது 3,530 வெள்ளியாக இருமடங்காக அதிகரிக்கும். இதற்கிடையில், மிக உயர்ந்த பதவியில் இருக்கும் மூத்த பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள், அதே காலகட்டத்தில் அவர்களின் அடிப்படை மாத ஊதியம் 2,240 வெள்ளியில் இருந்து 4,430 வெள்ளியாக அதிகரிக்கும்.

“ஒட்டுமொத்தமாக, அனைத்து வேலை நிலைகளிலும் உள்ள மாதாந்திர மொத்த ஊதியம் 2022 முதல் 2028 வரை சராசரியான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதம் அதிகரிக்கும். நவம்பர் 2017ல் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச 3 சதவிகித வருடாந்திர அதிகரிப்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும்” என்று STC தெரிவித்துள்ளது.

Related posts