TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களே.. நிர்கதியாய் நிற்கும் நேரத்தில் கைக்கொடுக்கும் தனிநபர் இன்சூரன்ஸ் – மாதம் 10 வெள்ளி கட்டினால் போதும்

வெளிநாடுகளில் வேலை செய்து வரும் ஊழியர்கள் இங்கு தனிநபர் இன்சூரன்ஸ் எடுப்பது அவர்களுக்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் இந்த பதிவில் காணலாம். உதாரணமாக இந்தியாவில் இருந்து நமது சிங்கப்பூருக்கு தொழில் ரீதியாக ஒருவர் வருகின்றார் என்றால் நிச்சயம் அவருக்கு இன்சூரன்ஸ் பதிவு செய்து அதன் பிறகே இங்கு அழைத்து வருவது வழக்கம். அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் ஏன் தனியாக மீண்டும் தனிநபர் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை என்று பலருக்கும் ஒரு கேள்வி எழுவது சகஜம் தான்.

நிறுவங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு இன்சூரன்ஸ் எடுத்து செல்லும்போது, அது தேவையான நேரத்தில் உங்கள் கஷ்டத்திற்கு முழுமையாக கைகொடுக்குமா என்று கேட்டால், அது சற்று சந்தேகமான விஷயம் தான். உதாரணமாக நிறுவனம் மூலம் எடுக்கப்படும் இன்சூரன்ஸ் மட்டும் வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று அங்கு ஏதாவது எதிர்பாராத விபத்து ஏற்படும் பட்சத்தில், அந்த இன்சூரன்ஸ் கவரேஜ் கொண்டு உங்கள் உடல்நிலை ஓரளவு சரியாகும் வரை மட்டுமே உங்களுக்கு பயன்படும்.

தேவையான முதலுதவி மட்டும் அளித்து, நீங்கள் ஓரளவு உடல்நலம் அடைந்த நிலையில் மீண்டும் தாயகம் அனுப்பப்படுவீர்கள். ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே உங்களுக்கான முழு இன்சூரன்ஸ் பலன்களையும் உங்களுக்கு கிடைக்கும் வண்ணம் செய்து தருகின்றனர். இதனால் தான் உங்கள் நிறுவனம் இன்சூரன்ஸ் எடுக்கும் அதே நேரத்தில் நீங்கள் ஒரு தனிநபர் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க – ஊழியரின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கே நேரில் வந்து வாழ்த்திய ஓனர்கள்.. கண் கலங்கிய ஊழியர் – ஊர் மக்கள் ஆச்சர்யம்!

மேலும் இந்த இன்சூரன்ஸ் எடுப்பதால் உங்களுக்கு பெரிய அளவில் நன்மை தருமா என்றால் நிச்சயம் கிடைக்கும் என்பதே பதில். சிங்கப்பூரில் நீங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கும்போது அதை உங்களுடைய மருத்துவ தேவைகளுக்கு நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளலாம். 50,000 வெள்ளிக்கு நீங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் நீங்கள் 50 வெள்ளி வரை பணம் செலுத்தவேண்டியிருக்கும். சிங்கப்பூரை பொறுத்தவரை குறைந்தபட்சமாக 10 வெள்ளி மாதம் கட்டும் இன்சூரன்ஸ் பிளான்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் நீங்கள் வெளிநாடுகளில் எடுக்கும் இன்சூரன்ஸ்களை பிற நாடுகளிலும் Claim செய்யலாம் என்பது யாரும் மறந்துவிட கூடாத ஒரு தகவல். ஆதலால் நீங்கள் எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும், உங்கள் நிறுவனம் உங்களுக்கு எடுக்கும் இன்சூரன்ஸ் போல நீங்களும் உங்களுக்கு ஒரு தனிநபர் இன்சூரன்ஸ் எடுப்பது மிகவும் நல்லது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts