சிங்கப்பூரில் நேற்று (ஜீலை.23) ஏழு பூனைகளை கடத்தியதாக ஒரு தாய் மற்றும் நான்கு பூனைகளை தனது Pant-க்குள் வைத்து கடத்திய அவரது மகன் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இல்லாமல் பூனைகளை எடுத்துச்சென்றதாகவும் மேலும் அவர்கள் மீது போடப்பட்ட 4 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டனர்.
விலங்குகள்,பறவைகள் சட்டம் மற்றும் பூனைகளை துன்புறுத்திய ரீதியிலும் குற்றச்சாட்டுக்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து
நாட்டிற்குள் நுழையும் துவாஸ் சோதனை சாவடியில் இவர்கள் காரில் பூனைகளை எடுத்துச்சென்றது தெரியவந்துள்ளது.
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 72 வயதான தாய் லியோங் சோக் பாய்க்கு 40 நாள் சிறையும், அவருடைய 47 வயது மகன் ஜஸ்டின் என்ஜி சீன் பூனுக்கு 12 வார சிறையும் தண்டனையாக விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.