TamilSaaga

இரண்டு மைனர் பெண்கள்.. கர்ப்பமாக்கிய சிங்கப்பூர் நபர் – கைது செய்வதில் சிக்கல்?

சிங்கப்பூரில் இரண்டு மைனர் பெண்கள் மற்றும் 18 வயது பெண் ஒருவரை கர்ப்பமாக்கிய நபரை, ஜூலை 21ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட குற்றங்களை செய்தபோது அந்த நபருக்கு 18 வயது நிரம்பவில்லை என்ற காரணத்தால் அப்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படாமல் இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வரும் வாரத்தில் அந்த நபருக்கு 21 வயது நிரம்பவுள்ள நிலையில் அவர் ஜூலை 21ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மைனர் பெண்களை கர்ப்பமாக்கியது மற்றும் 18 வயது நிரம்பிய பெண்ணை காயப்படுத்தியது உள்பட 17க்கும் அதிகமாக குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அந்த நபருக்கு 17 வயது நிரப்பிய நிலையில் 15 வயது மைனர் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறிய நிலையில் அவர்கள் பலமுறை பாதுகாப்பற்ற முறையில் பாலியில் ரீதியாக ஒன்று கூடியுள்ளனர். இறுதியில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்கள் காதல் உறவில் முறிவு ஏற்பட்ட நிலையில் 2018ம் ஆண்டு அந்த பெண் கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது.

அந்த சிறுமி குறைந்த வயதில் கர்ப்பம் தரித்தது குறித்து தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, மார்ச் 2018ல் ஒரு போலீஸ் அறிக்கையை தாக்கல் செய்ததும் நினைவுகூரத்தக்கது.

மீண்டும் அந்த நபர் 2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 12 வயது பெண்ணிடமும் காதல் கொண்டு சில மாதங்கள் கழித்து அந்த பெண் 10 வார கர்பஸ்தரியாக இருந்த நிலையில் தனது கருவை களைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக 2019ம் ஆண்டு 18 வயது பெண்ணுடனும் இதேபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் அந்த ஆடவர். மேலும் அந்த பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மார்ச் 2020ல் கர்பமாக இருந்த அந்த பெண், ஜூலை மாதத்தில் ஒரு குழந்தையை பெற்றுள்ளார்.

இந்நிலையில் 17க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் அந்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் வரும் 21ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உள்ளார். குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் மைனர் பெண்களை கர்ப்பமாக்கியதற்காக 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts