தமிழ்நாட்டில் தற்போது ஏகப்பட்ட யூட்யூப் சேனல்கள் இயங்கி வந்தாலும், சில சேனல்களுக்கு தான் மிகப்பெரிய ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில், தனி ஆளாக யூடியூப் நடித்தி அதில் வெற்றியும் பெற்றவர் மதன் கௌரி. தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியில் இருந்து மீள உருவாக்கப்பட்ட இந்த சேனல் தற்போது அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று கொடுத்திருக்கிறது.
சமீபத்தில் யூட்யூப் கிரியேட்டர் சப்மிட் 2022 சிங்கப்பூரில் நடந்தது. அதில் ஆசியாவின் 100 யூ ட்யூப்பர்களில் ஒருவராக மதன் கௌரியும் அழைக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் கலந்து கொண்டு திரும்பும் போது சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு பிஸினஸ் கிளாஸில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் அவர் செய்த பயணத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அது பட்டி தொட்டியெங்கு வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, சிங்கப்பூரில் ஏர்லைன்ஸில் பிஸினஸ் டிக்கெட் மற்றும் எகானமி டிக்கெட் ரெண்டுக்குமே தனி தனி வழி இருக்கும். அந்த வழியாக சென்று பிஸினஸ் கிளாஸ் ஒதுக்கப்பட்டு இருக்கும் லாஞ்சில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம். பின்னர் விமானத்துக்கு செல்லும் போது கொஞ்சம் உஷாராக இருங்க சிங்கப்பூர் விமானத்தில் ஜூஸை எடுத்துச் செல்ல கூடாதாம்.
பெட்டாக மாறும் அளவுக்கு செம லக்சூரியாக அமைக்கப்பட்டிருந்த அந்த சீட்டில் ஏகப்பட்ட வசதிகள் இருந்தது. அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் தமிழிலும் அறிவிப்புகள் கூறப்படுவதே அதீத மகிழ்ச்சியாக இருந்தது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் 30000 அடி உயரத்தில் வைஃபை பயன்படுத்த முடிந்தது. அதுமட்டுமல்லாமல் டாய்லெட்டே உயரகமாக இருந்தது. இருந்து விமானம் பறந்து கொண்டு இருக்கும் போதே எனக்கு இந்த ஐடியா தோன்றியது. அதான் பல்லு விளக்க வேண்டும் என்பது. அதை செய்ததே ஆச்சரியமாக இருந்தது.
5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டைலில் சாப்பாடு கொடுத்தார்கள். வெஜ் என்பதால் செஃப் எனக்காக ஸ்பைஷாலாக இந்திய உணவுகளை செய்து கொடுத்தாங்க. இந்த விமானத்தில் மட்டும் பிஸினஸ் கிளாஸில் சமைத்து கொடுப்பதே வழக்கம். ஏகப்பட்ட வசதிகளை இந்த சிங்கப்பூர் விமானம் வைத்துள்ளது. ஆனால் வாழ்க்கையில் ஒருமுறை பிஸினஸ் டிக்கெட்டில் பயணம் செய்ய விரும்பினால் இது ஓகே. அடிக்கடி என்பது ஓவர் ரேட்டாக இருந்தது எனக் குறிப்பிட்டார். அட ஒரு டிக்கெட் ஒரு லட்ச ரூபாயாம்…