சிங்கப்பூரில் வேலைக்காக பலரும் வொர்க் பெர்மிட், PCM Permit, S-Pass மற்றும் E-Passல் சிங்கப்பூர் வருவார்கள். இவர்கள் agency அல்லது agent மூலமாக தான் சிங்கப்பூர் வருவார்கள். இதில் சிலர் நேரடியாக ஆன்லைனில் அப்ளே செய்தாலும், தொடர்ந்து காலதாமதம் ஆவதால் அவர்களும் ஏஜென்ட் உதவியை தான் நாடிவார்கள்.
எல்லா தொழில் போல இதிலும் நிறைய போலிகள் இருக்கிறார்கள். அவர்கள் கண்டறிவது அவ்வளவு எளிதாக இருக்காது. அதற்காக சிங்கப்பூரில் இருக்கும் அதிகாரப்பூர்வ ஏஜென்சி குறித்து தெரிந்து கொள்ள உங்களாலும் முடியும்.
https://www.mom.gov.sg/eservices/services/employment-agencies-and-personnel-search இந்த லிங்கினை க்ளிக் செய்யுங்கள். இதில் search என்ற ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்தால் வேறு ஒரு பக்கம் திறக்கும். அதில் உங்களின் சிங்கப்பூர் ஏஜென்சியின் பெயரை குறிப்பிட்டால் அவர்கள் குறித்த எல்லா தகவலும் வந்து விடும். Mom தளத்திலேயே இதில் எப்படி தேடலாம் என்பது குறித்து கூட ஒரு user guide இருக்கும் தேவைப்பட்டால் படித்துக்கொள்ளலாம்.
வெளிநாட்டு ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சிங்கப்பூர் தொழிலாளர்கள் மற்றும் PRக்காக இருக்கும் ஏஜென்சி குறித்து இதில் நீங்க தேடிக்கொள்ள முடியும். கஷ்டமர் ரேட்டிங், அவர்களின் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களால் ஒரு ஏஜென்சியை தேட முடியும்.
வரும் ரிசல்ட்டில் இருக்கும் ஏஜென்சியின் பெயருக்கு அருகில் இருக்கும் arrowஐ க்ளிக் செய்தால் அவர்கள் எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். எத்தனை பேர் retention மற்றும் transfer வாங்கி இருக்கிறார்கள் என அனைத்து தகவல்களும் தெரிந்து விடும். அதில் ஏஜென்சியின் முகவரி மற்றும் தொடர்பு எண் கூட இருக்கும். இதே நடைமுறையில் தான் வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஏஜென்சியினை குறித்து தெரிந்து கொள்ள முடியும்.
இதில் சரியில்லாத ஏஜென்சியினை உங்களால் தவிர்த்து கொள்ள முடியும். Under Revocation/Suspension/ Surveillance செக்ஷனில் இருக்கும் ஏஜென்சி தவிர்த்து விடுங்கள். இதை MOM தரப்பிலேயே தெரிவித்து இருக்கிறார்கள். முக்கியமாக ஏஜென்சியினை தேர்வு செய்யும் போது அவர்களின் அனுபவத்தினை கருத்தில் கொள்ளுங்கள். ஒரு நிறுவனம் பல வருடமாக அந்த தொழில் இருக்கிறார்கள் என்றால் அவர்களை நம்ப முடியும். தவறு செய்திருந்தால் அவர்களால் அந்த தொழில் தாக்குப்பிடிக்க முடியாது தானே. இதனால் Experience செக்ஷனில் அதிகமாக இருக்கும் ஏஜென்சியினை தேர்வு செய்வது உங்களுக்கு வேலை கிடைப்பதினை துரிதப்படுத்தும்.
இதில் சில ஏஜென்சி மீது demerit points எனக் குறிப்பிட்டு இருக்கும். இது சிங்கப்பூர் அரசின் விதிகளை சரியாக பின்பற்றாதவர்களுக்கே இதுப்போல குறிப்பிடப்பட்டு இருக்கும். அவர்களையும் தவிர்த்து விடுவது நல்லது. ஏஜென்சி லிஸ்ட்டினை மொத்தமாக download செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:MOM