TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு வர டெஸ்ட் அடிச்சுட்டீங்களா? நீங்க சிங்கை வராம லேட் பண்ற ஒவ்வொரு நாளும் ஆபத்து! ஜனவரிக்கு அப்புறம் எல்லா Rules-ம் மாறிடுச்சுனா… டெஸ்ட் அடிச்ச Certificate எல்லாம் வேஸ்ட்!

சிங்கப்பூருக்கு செல்ல ஆசை இருந்தும் டிகிரி இல்லாத சிலருக்கு ரொம்பவே பாதுகாப்பாக இருப்பது skilled test தான். இதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் அதிகாரப்பூர்வ இன்ஸ்ட்யூட்களில் பயிற்சிக்கு சேர அட்மிஷன் போட்டு சில காலம் பயிற்சி எடுத்து டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் பறக்கின்றனர்.

ஆனால் இப்போது அந்த இன்ஸ்ட்யூட்களே பெரிய அட்டூழியங்களை செய்து வருகின்றது என்றால் நம்ப முடிகிறதா? கோட்டாவின் அளவினை சிங்கப்பூர் கட்டுபடுத்தியதில் இருந்தே இன்ஸ்ட்யூட்கள் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்து விட்டது. சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல skilled test அட்மிஷன் போட போனால் அக்கவுண்ட்டில் பணம் வாங்கப்படுவது இல்லை. கையில் காசாக மட்டுமே வாங்குகிறார்களாம். அதற்கும் அளவுகோல் என எதுவும் இல்லை. இஷ்டப்பட்ட நேரத்தில் காசை கறந்து வருகின்றனர்.

சிலருக்கு பாஸ்போர்ட் கொடுத்து IPA ரிலீஸ் செய்யவே அதிகமான தொகையை கேட்பதாக கூறப்படுகிறது. கோட்டா கட்டுப்பாட்டால் இன்ஸ்ட்யூட்களும் காசை பிடுங்க ஏகப்பட்ட கெடுப்பிடிகள் காட்டுகிறதாம். பாண்ட் வந்தும் கூட IPA ரிலீஸை செய்யாமல் இளைஞர்களை காலையில் இருந்து மாலை வரை நிற்க வைக்கிறார்களாம்.

டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் சென்று வேலை செய்யலாம் என நினைக்கும் இளைஞர்களின் இந்த முதல் அடியே மிகப்பெரிய சறுக்கலாக மாறிவிடும். ஆனால், உங்களது பாஸ்போர்ட்டை முதலில் யாருமே பிடித்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். காவல்துறையினர் செய்வதற்கே நீதிமன்ற உத்தரவு வேண்டும் என்னும் போது. ஏஜென்ட்கள் பிடித்து வைக்க உரிமையே இல்லை.

இந்த சூழலில் தான், டெஸ்ட் அடித்துவிட்டு சிங்கப்பூர் வராமல் இருப்பவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் அடித்தவர்கள் இன்னும் சிங்கப்பூர் வராமல் இருக்கின்றனர்? எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இவ்வாறு எடுக்கப்படும் பட்சத்தில், டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வராமல் காலம் தாழ்த்தியவர்களின் சர்டிஃபிகேட் செல்லாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், வரும் ஆண்டு முதல் இந்த நடைமுறையை அமல்படுத்தலாம் என்று தெரிகிறது.

எனவே, டெஸ்ட் அடித்தவர்கள் முடிந்த அளவு விரைவாக கம்பெனி போட்டு சிங்கப்பூர் வருவது நல்லது. ஏனெனில், எப்போது சிங்கை அரசு புதிய நடைமுறைகளை அமல்படுத்தும் என்று தெரியாது. விரைவில் சிங்கப்பூர் வருவதற்கான பணிகளையும் மேற்கொள்ளுங்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts