SINGAPORE: சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சகத்தின் (Ministry Of Manpower) அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி வரும் அக்டோபர் 1, 2022 முதல், வெளிநாட்டு ஊழியர்களுக்கான தடுப்பூசி நெறிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, புதிய பாஸ்களுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ வேண்டுமெனில், ஊழியர்கள் முழுமையாக அனைத்து தடுப்பூசிகளும் போட்டிருக்க வேண்டும். அதாவது Fully Vaccinated எனும் ஆவணம் சமர்ப்பித்தால் தான் நீங்கள் புதிதாக பாஸ் பெற முடியும், அல்லது புதுப்பிக்க முடியும்.
Types of Pass Holders | கண்டிப்பாக செய்ய வேண்டியவை |
கட்டுமானம், marine shipyard அல்லது process sectors-களில் பணிபுரியும் Work Permit மற்றும் எஸ் பாஸ் வைத்திருப்பவர்கள். Dormitories-களில் தங்கியிருக்கும் Work Permit மற்றும் எஸ் பாஸ் வைத்திருப்பவர்கள். | புதிய Passes-களுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது புதிப்பிக்கவோ வேண்டுமெனில், கட்டாயம் முழுமையான தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். |
மற்ற Pass Holders | புதிய Passes-களுக்கு விண்ணப்பிக்க கட்டாயம் முழுமையான தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். |
Pass-க்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் கவனத்திற்கு
பிறந்த தேதியின் அடிப்படையில் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து pass holders-களும் (work pass holders, dependants and helpers) புதிய பாஸ்களுக்கு விண்ணப்பிக்கும் முன், அவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் (தகுதி இருந்தால் பூஸ்டர் உட்பட). அவர்களின் முழுமையான தடுப்பூசி நிலை அவர்களின் HealthHub அல்லது TraceTogether பயன்பாட்டில் பிரதிபலிக்க வேண்டும்.
பாஸ் வைத்திருப்பவர்கள் தங்கள் முழுமையான தடுப்பூசி status-ஐ தக்கவைக்க, அவர்களின் கடைசி முதன்மை தடுப்பூசி டோஸிலிருந்து 270 நாட்களுக்குள் பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும்.
தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸைப் பெற அவர்கள் கூட்டுப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையங்களில் ஏதேனும் ஒன்றிற்கு செல்லலாம்.
வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட Pass Holders கவனத்திற்கு
சிங்கப்பூருக்குள் நுழைந்த பிறகு, பாஸ் வைத்திருப்பவர்கள் தங்கள் வெளிநாட்டு தடுப்பூசி பதிவுகளை செரோலஜி பரிசோதனை மூலம் சரிபார்க்க வேண்டும் அல்லது உள்ளூர் கிளினிக்கில் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய தடுப்பூசி சான்றிதழ்களை (டிவிசி) சரிபார்க்க வேண்டும்.
கீழே குறிப்பிட்டுள்ளபடி அவர்கள் தங்கள் தடுப்பூசி பதிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் சரிபார்க்க வேண்டும்
Types of pass holders | தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணங்களை சரிபார்ப்பதற்கான காலக்கெடு |
கட்டுமானம், marine shipyard அல்லது process sectors-களில் பணிபுரியும் Work Permit வைத்திருப்பவர்கள், Training Work Permit அல்லது எஸ் பாஸ் வைத்திருப்பவர்கள் | சிங்கப்பூர் வந்த 7 நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் |
இதர passes வைத்திருப்பவர்கள் | சிங்கப்பூர் வந்த 30 நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் |
Pass புதுப்பிக்க உள்ளவர்கள் கவனத்திற்கு
பிறந்த தேதியின் அடிப்படையில் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து பாpass holders-களும் (work pass holders, dependants and helpers), ஏற்கனவே உள்ள பாஸ்களைப் புதுப்பிக்கும் முன், அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் (தகுதி இருந்தால் பூஸ்டர் டோஸ் உட்பட). அவர்களின் முழுமையான தடுப்பூசி நிலை அவர்களின் HealthHub அல்லது TraceTogether பயன்பாட்டில் பிரதிபலிக்க வேண்டும்.
வெளிநாடுகளுக்குச் சென்று முழு தடுப்பூசி செலுத்திக் கொண்ட Pass Holders, சிங்கப்பூர் திரும்பியதும் உள்ளூர் கிளினிக்கில் தடுப்பூசி நிலையைச் சரிபார்க்க வேண்டும்.